குஜராத் மோர்பி பால விபத்து குறித்து பிரதமர் மோடி உருக்கம். ”நான் இப்போது ஏக்தா நகரில் இருக்கிறேன். என் மனமோ மோர்பி பால விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை எண்ணிக் கொண்டு வருந்திக் கொண்டு இருக்கிறது. என்னுடைய வாழ்க்கையிலேயே இது போன்ற வேதனையை அனுபவித்து இல்லை. ஓருபுறம் மனதில் வலி, மறுபுறம் கடமை இருக்கிறது” என உருக்கமாக கூறியுள்ளார்.
குஜராத்தின் மோர்பி நகரில் ஓடும் அச்சு ஆற்றின் மீது கட்டப்பட்ட கேபிள் பாலம் இடிந்து விழுந்து 350 க்கும் மேற்பட்ட மக்கள் விபத்துக்கள்ளாகினர். இந்த துயரச் சம்பவத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் நேர்ந்துள்ளது. இதனால் பெரும் விபத்து நாட்டையே பேர அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
பலரது உயிர்கள் மீட்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர் மருத்துவமனைகள் இருந்தும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டும் மரணித்தும் பலரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இதனால் குஜராத் நகரமே துயரத்தில் ஆழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மோர்பில் 100 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்த கேபிள் பாலம், புதுப்பிக்கப்பட்டு 4 நாட்களுக்கு முன்பு அதாவது கடந்த 26ம் தேதிதான் மீண்டும் திறக்கப்பட்டது. குஜராத் புதுவருடப் பிறப்பை ஒட்டி பாலம் திறக்கப்பட்ட நிலையில், இன்று அது இடிந்து விழுந்துள்ளது. பாலம் இடிந்து விழும்போது அதில் 500க்கும் மேற்பட்டோர் இருந்துள்ளனர். அவர்களில் சுமார் 350 பேர் ஆற்றில் விழுந்துள்ளனர்.
விபத்து தகவல் அறிந்ததும் தீயனைப்புத் துறையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர், முதல்வரின் அறிவிப்பில் என பல மீட்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணிகளுக்கு உதவினர். இந்த செய்தியை அறிந்த பிரதமர் அனைத்துவித உதவிகளும் மாநில அரசுக்கு உதவும் எனவும் மத்திய அரசு மீட்பு படையினர் விரைந்து உதவுவர் என்றும் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், இவ்விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு மத்திய அரசின் நிவாரணமாக 2 லட்சமும், காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு 50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.