நாகசைதன்யா வெங்கட் பிரபு கூட்டணியில் NC22 படம் பற்றிய அப்டேட். நடிகர் நாகசைதன்யா தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர்.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான நாகசைதன்யா தமிழில் சூப்பர் ஹிட் படங்களை தனக்கே உரிய பாணியில் கொடுத்த வெங்கட் பிரபு இயக்கத்தில் இணைந்துள்ளார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகிறது. இதுவரை நாகசைதன்யா நடித்த படங்களிலேயே இப்படம் அதிக செலவில் உருவாகும் படமாகவும் இருக்கின்றது.
இப்படத்தில் கதநாயகனாக நடிக்கும் நாகசைதன்யா. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கியது. தற்காலிகமாக NC 22 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தில் அரவிந்த் சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும்,சரத்குமார், ப்ரேம்ஜி அமரன், ப்ரேமி விஷ்வானந்த், சம்பத் ராஜ், கிஷோர் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மிக முக்கிய கதாபாத்திரத்தில் ப்ரியாமணி நடிக்கவுள்ளதாக தகவல் வந்துள்ளது. இவர் நடிப்பு திறமைக்காக தேசிய விருது பெற்ற நடிகை என்பது நாம் அறிந்ததே.
இந்த படத்திற்கு இளையராஜா மற்றும் அவரது மகன் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இசையமைக்கின்றனர். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் பேனரின் கீழ் ஸ்ரீனிவாசா சித்தூரி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். பவன்குமார் இந்தப் படத்தை வழங்குகிறார். அபூரி ரவி இந்தப் படத்திற்கு வசனங்கள் எழுத, SR கதிர் ஒளிப்பதிவை கையாள்கிறார். தற்போது விறுவிறுப்பாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் இப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இப்படம் ஆக்ஸ்ன் எண்டர்டென்மென்ட் படமாக இருக்கும் எனவும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. வெங்கட் பிரபு தமிழில் பல வெற்றி படங்களை தந்தவர் என்பதால் அவரை நம்பலாம் என்கிறது ரசிகர்கள் பட்டாளம்.