Home சிறப்பு செய்திகள் 10 நாள் அஞ்சலிக்குப் பின் ராணி இரண்டாம் எலிசபெத் உடல் நல்லடக்கம்

10 நாள் அஞ்சலிக்குப் பின் ராணி இரண்டாம் எலிசபெத் உடல் நல்லடக்கம்

0
3

எலிசபெத் ராணி: இங்கிலாந்து நாட்டின் ராணியாக கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த 2ம் எலிசபெத் ராணி அவர்கள் கடந்த செப்டமபர் 8 ம் தேதி தனது 96 வயதில் காலமானார். அவரது உடல் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் இருந்து எடின்பர்க் கொண்டு செல்லப்பட்டு, கடந்த 3 நாட்களுக்காக பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு 8 கிமீ தூரம் நீண்ட வரிசையில் 14 மணி நேரம் காத்திருந்து மக்கள் அஞ்சலி செலுத்தினர். அதன்பிறகு அவரது உடல் உலக தலைவர்கள் மற்றும் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் அஞ்சலி செலுத்துவதற்காக வெஸ்ட் மினிஸ்டர் மண்டபத்தில் நேற்று காலை 6 மணி வரை வைக்கப்பட்டது.

உலக தலைவர்கள் அஞ்சலி

மறைந்த ராணி எலிசபெத் அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பல்வேறு நாடுகளின் தலைவர்கள் லண்டன் சென்றனர். இந்தியா சார்பாக இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ அவர்கள், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த முக்கிய உலக தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மூ அவர்கள் பதவியேற்ற பிறகு அவர் செல்லும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.

ராணியின் உடல் நல்லடக்கம்

மறைந்த ராணியின் உடல் நேற்று மாலை 3.30 மணியளவில் வெஸ்ட்மினிஸ்டர் மண்டபத்தில் இருந்து ஜார்ஜ் சந்திப்பு, விக்டோரியா சந்தி்ப்பு உள்ளிட்ட லண்டனின் முக்கிய சாலைகள் வழியாக எடுத்து செல்லப்பட்டது. அப்போது சாலையின் இருபுறங்களிலும் மக்கள் கூடி நின்று தங்களது பிரியமான ராணிக்கு பிரியா விடை கொடுத்தனர். பின்னர் இந்த ஊர்வலம் திருப்பலி நடைபெறும் புனிதகில்ஸ் பேராலாயத்தை சென்றடைந்தது. ராணியின் உடல் வைக்கப்பட்டிருந்த பழமை வாய்ந்த அலங்கரிக்கப்பட்ட சவப்பெட்டியை இங்கிலாந்தின் முப்படை வீரர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.

queen elizebeths funeral

பின்னர் ராயல் கடற்படையின் 142 மாலுமிகள், 123 ஆண்டு பழமை வாய்ந்த பீரங்கி எடுத்துசெல்லும் வண்டியில் வைத்து வெஸ்ட் மினிஸ்டர் அபேவுக்கு இழுத்து சென்றனர். இதில் ராணியின் 4 பிள்ளைகள், அவரது 8 பேரப்பிள்ளைகள், அவர்களது மனைவியர் உட்பட அரச குடும்பத்தை சேர்ந்த 2,000 பேர் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர். தற்போது மன்னராக பதவியேற்றுள்ள ராணியின் மகன் மூன்றாவது சார்லஸ் அரச உடையில் அனைத்து பதக்கங்களுடனும், 2012 ம் ஆண்டு ராணி அவருக்கு பரிசளித்த பீல்டு மார்ஷல் கைத்தடியுடனும் இருந்தார்.

ராணியின் உடல் 32 கிமீ நீண்ட பயணத்துக்கு பிறகு வின்ச்டரில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு அரச குடும்பத்தினர் மட்டும் ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது உடல் அரச குடும்பத்தினரின் உடல்களை வைக்கும் பெட்டகத்தின் அருகே இறக்கப்பட்டது. பின்னர் பேராயரிடம் சவப்பெட்டி ஒப்படைக்கப்பட்டது. மௌன அஞ்சலிக்கு பிறகு முப்படைகளின் இசை மரியாதை செலுத்தப்பட்டது.

ராணியின் கிரீடம் உள்ளிட்டவை மன்னர் சார்லஸின் மனைவி கமீலாவிடம் ஒப்படைக்கப்பட்டது. பிறகு மன்னர் ஆறாம் ஜார்ஜ் நினைவு சிற்றாலயத்தில், மறைந்த கணவர் இளவரசர் பிலிப் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் அருகே இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. ராணியின் இறுதி சடங்கு முடிந்த பின்னர், இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இறுதி ஊர்வலம் மற்றும் சடங்கு நிகழ்ச்சிகள் முழுவதும் இங்கிலாந்தில் உள்ள பூங்காக்கள், சதுக்கங்கள், திரையரங்குகளில் பெரிய திரைகளில் நேரடி ஒளிபரப்பாக்க ஒளிபரப்பப்பட்டது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here