ராசி நட்சத்திரம் அட்டவணை

0
10

ராசி நட்சத்திரம் அட்டவணை: பொதுவாக ஜோதிடத்தில் 27 நட்சத்திரங்கள் காணப்படுகிறது. அந்த 27 நட்சத்திரமும் மிக முக்கியமானதாக உள்ளது. ஓரு குழந்தை பிறக்கும் போது எந்த நட்சத்திரத்தில் சந்திரன் இருக்கின்றதோ அந்த நட்சத்திரமே அந்த குழந்தையின் பிறப்பு நட்சத்திரமாக பார்க்கப்படுகிறது. ஓரு குழந்தையின் நாள் நேரத்தை வைத்து குழந்தையின் நட்சத்திரம் ராசியை எளிமையாக கணக்கிட முடியும்.

ராசி சக்கரத்தில் 12 ராசி கட்டங்கள், 9 கிரகங்கள், 12 வீடுகள், 27 நட்சத்திரங்கள் காணப்படும். ராசி கட்டங்கள் 12 ஆக பிரி்க்கப்பட்டுள்ளது. இதனை வீடுகள் என்பர். ஓருவருடைய ராசியை வைத்து தான் நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை கணித்து சொல்ல முடியும்.

ஓவ்வொரு ராசியும் ஓவ்வொரு குண நலன்களை தரும் என்பதில் ஐயமில்லை. சித்திரை மற்றும் சூரியன் உச்சமடையும் காரணத்தால் மேஷத்தை முதல் ராசியாக வைத்து கண்க்கிட்டார்கள் ஜோதிட சாஸ்திரிகள்.

ராசி நட்சத்திரம் அட்டவணை

27 நட்சத்திரங்கள் 12 ராசிகள்(12 Rasi and Natchathiram in Tamil)– நாம் இந்த பதிவில் 12 ராசிகளும் 27 நட்சத்திரங்கள் பற்றி அறிந்துகொள்வோம் மேலும் ஒவ்வொரு ராசிகளுக்குரிய நட்சத்திரங்கள் எவை எவை என்று அறிந்து கொள்வோம்.

அறிந்து கொள்க: பெண் நட்சத்திர பொருத்தம் அட்டவணை

27 நட்சத்திரங்கள் 12 ராசிகள் அட்டவணை:

மேஷம்
நட்சத்திரங்கள் – அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ஆம் பாதம்

ரிஷபம் 
நட்சத்திரங்கள் – கார்த்திகை 2,3,4ஆம் பாதம், ரோகிணி, மிருகுசீரிடம் 1,2ஆம் பாதம் வரை

மிதுனம்
நட்சத்திரங்கள் – மிருகசீரிடம் 3,4ஆம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3ஆம் பாதம் முடிய

கடகம்
நட்சத்திரங்கள் – புனர்பூசம் 4ஆம் பாதம், பூசம், ஆயில்யம்

சிம்மம்
நட்சத்திரங்கள் – மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம்

கன்னி

நட்சத்திரங்கள் – உத்திரம் 2,3,4ஆம் பாதம், ஹஸ்தம், சித்திரை 1,2ஆம் பாதம்

துலாம்
நட்சத்திரங்கள் – சித்திரை 3,4ஆம் பாதம், சுவாதி, விசாகம் 1,2,3ஆம் பாதம்

விருச்சிகம்
நட்சத்திரங்கள் – விசாகம் 4ஆம் பாதம், அனுஷம், கேட்டை

தனுசு
நட்சத்திரங்கள் – மூலம், பூராடம், உத்திராடம் 1 ஆம் பாதம் வரை

மகரம்
நட்சத்திரங்கள் – உத்திராடம் 2,3,4ஆம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2ஆம் பாதம்

கும்பம்
நட்சத்திரங்கள் – அவிட்டம் 3,4ஆம் பாதம், சதயம், பூரட்டாதி 1,2,3 ஆம் பாதம்

மீனம்
நட்சத்திரங்கள் – பூரட்டாதி 4ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

ஓவ்வொருவரும் அவரவரின் நட்சத்திரம் மற்றும் ராசியினை தெரிந்து வைத்து கொள்வது மிக முக்கியமானதாக உள்ளது.

மேலும், இது போன்ற ஜோதிடம், ஆன்மீகம், கல்வி, பொது அறிவு, உடல்நலம் என அனைத்து தகவல்களையும் பெற தலதமிழ் இணையதளத்தை படிக்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here