மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் இணையவுள்ளார்

0
3

மணிரத்னம் இயக்த்தில் வெளியாகும் படங்கள் பெரும் வெற்றி பெறும். அந்த அளவிற்கு மணிரத்னம் தன் முழு திறமையையும் இயக்கத்தில் காட்டுவார். அந்த வகையில் உருவாகிய வெற்றி படம் தான் பொன்னியின் செல்வன் பாகம் 1.

பொன்னியின் செல்வம் திரைப்படம் அமரர் கல்கி எழுதிய புதினம் அந்த புதினத்தை தழுவி எடுக்கப்பட்ட படம் கடந்த 30ம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி தமிழ்நாடு மட்டும் அல்லாது வெளிநாடுகளிலும் பெரும் வரவேற்பையும் ஆராவாரதையும் வசூலிலும் பல சதனைகளை படைத்து வந்து கொண்டுள்ளது.

தற்போது வரை இப்படத்தின் வசூல் 400 கோடியை கடந்து உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 170 கோடியை கடந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. சூப்பர் ஸ்டாரின் 2.0 உலக நாயகனின் விக்ரம் படத்தின் வசூல் என அனைத்தையும் கடந்து சென்று கொண்டுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் இணையவுள்ளார்

இந்நிலையில், ரஜினிகாந்த்தின் அடுத்த படத்தை மணிரத்னம் இயக்கவுள்ளதாக தகவல்கள் தெரிகின்றது. பொன்னியின் செல்வன் பாகம் 2 முடிந்த உடன்  இந்த செய்தி பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் வரும் என எதிர்பார்கக்ப்படுகிறது. இப்படத்தையும் லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக தகவல்.

இதையும் கவனியுங்கள்: இன்று ‘National No Bra Day’ கடைப்பிடிக்கப்படுகின்றது

நடிகர் ரஜினியின் 169-வது படம் ஜெயிலர். நெல்சன் இயக்கும் இப்படத்தில் நடிகர் ரஜினிக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் யோகிபாபு, வஸந்த் ரவி, தமன்னா, ஷிவ ராஜ்குமார் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

இப்படத்திற்கு பிறகு டான் படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தியுடன் இணையவுள்ளதாக முன்னரே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மணிரத்னத்துடன் இணையவுள்ளதாக தகவல் வந்துள்ளது. எந்த படத்திற்கு முதலில் பச்சை கொடி காட்டுவார் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ரஜினிக்கு மிகப் பெரும் வெற்றியை பெற்று தந்த படம் தளபதி இப்படத்தை மணிரத்னம் இயக்கினார் என்பது அனைவரும் அறிந்ததே. 32 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் இணையும் படம் என்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here