செஸ் வீரர் பிரக்ஞானந்தாவை நேரில் அழைத்து ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார்.
உலக நாடுகளில் உள்ள செஸ் வீரர்கள் தமிழ்நாட்டில் உள்ள சென்னைக்கு அருகில் மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கும் செஸ் ஓலிம்பியாட் போட்டியில் பங்கேற்க வருகைப் புரிய உள்ளனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டின் இளம் செஸ் வீரரான பிரக்ஞானந்தாவை நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டிற்கு அழைத்து அவரையும் அவரது குடும்பத்தையும் வரவழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலகப்புகழ் பெற்ற செஸ் ஓலிம்பியாட் போட்டிகள் இந்தியாவில் நடைபெறுவது பெருமை அதிலும் தமிழ்நாட்டில் உலக பெருமைப் பெற்ற மாமல்லபுரத்தில் வருகின்ற 28 ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.
இந்நிலையில், ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ளும் தமிழக வீரர்கள் பிரக்ஞானந்தா மற்றும் அவரின் சகோதரி வைசாலி ஆகியோரை நேரில் அழைத்து வாழ்த்தினார். இருவரும் செஸ் ஓலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்கின்றனர்.
அந்தப் போட்டிகளில் இவர்கள் போட்டியில் சாதனை படைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறு வயதிலேயே செஸ் போட்டியில் சாதனைகள் படைத்த அவர்கள் இருவரையும் குடும்பத்தினருடன் நடிகர் ரஜினிகாந்த் தன் இல்லத்திற்கு அழைத்து வாழ்த்தி உள்ளார்.
இதையும் படியுங்கள்: நான் சந்தோஷம், நிம்மதி 10% கூட பார்த்த இல்லை ரஜினிகாந்த் பேச்சு
அந்த சந்திப்பின்போது வாழ்த்து தெரிவித்து பாராட்டியதுடன் நாட்டிற்கு பல சாதனைகள் செய்து விருதுகள் வெல்ல வேண்டும் எனவும் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். இந்த சந்திப்பில் பிரக்ஞானந்தா மற்றும் வைசாலியுடம் அவர்களின் பெற்றோரும் கலந்துகொண்டனர். அவர்களுக்கு ரஜினிகாந்த் நினைவு பரிசு வழங்கினார்.
சமீபத்தில் இரவின் நிழல் படத்தின் இயக்குனர் பார்த்திபனை வீட்டிற்கு அழைத்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி சாதனைப் புரிபவர்களை அழைத்து ரஜினிகாந்த் பாராட்டுவது அவர்களுக்கு மிகவும் ஊக்கத்தையும் ஆக்கத்தையும் வழங்கும் என்பதில் ஐயமில்லை.