டி20 உலக கோப்பை முடிந்துள்ள நிலையில் ஐசிசி வெளியிட்ட தரவரிசை பட்டியல். உலக கோப்பை இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேராத போதிலும் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறார் இந்தியாவின் 360 சூர்யகுமார் யாதவ்.
2022 க்கான உலக கோப்பையில் இறுதி போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய போதிலும் அனைவரும் எதிர்பார்த்தது பாகிஸ்தான் வெல்லும் என்று. ஆனால், இங்கிலாந்து அணி உலக கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது. பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் உலக கோப்பை ஆரம்பம் முதலே நல்ல ஆட்டத்தை தந்தனர்.
இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெறாத போதிலும் இந்த உலக கோப்பை போட்டியில் இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் மற்றும் விராட் கோலி நல்ல திறமையை வெளிப்படுத்தினர். அதிலும் 2 ஆண்டுகள் சரியான பாமில் இல்லை என்று பெரிதும் பேசப்பட்ட கோலி இந்த போட்டிகளில் நல்ல மதிப்பை பெற்றார். டி20 உலக கோப்பையில் 4 அரைசதங்களுடன் மொத்தம் 296 ரன்களை குவித்திருந்தார்.

சூர்யகுமார் 3 அரைசதங்களுடன் 239 ரன்களை எடுத்திருந்தார். புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திலேயே இருந்து இந்திய அணிக்கு பெருமை சேர்த்துள்ளார். இவர் 859 புள்ளிகள் பெற்று தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பெற்றிருக்கிறார். இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பாகிஸ்தான் அணி வீரர்களான ரிஸ்வான் மற்றும் பாபர் தொடர்ந்து இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தில் இருந்து வருகின்றனர். ரிஸ்வான் 836 புள்ளிகளையும், பாபர் அசாம் 778 புள்ளிகளுடனும் இருக்கின்றனர்.
தொடர்ந்து ஓன்பதாவது இடத்தில் இருந்து வந்த கோலி 2 இடங்கள் பின்சென்று 11 வது இடத்திற்கு சென்றார். டி20 அணிகள் தரவரிசையில் 268 புள்ளிகளுடன் இந்திய அணி முதல் இடத்திலும், 265 புள்ளிகளுடன் இங்கிலாந்து இரண்டாவது இடத்திலும் 261 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது பாகிஸ்தான் அணி.
இதையும் படியுங்கள்: Wonder Women: பெண்களின் கர்பகாலத்தை மையப்படுத்தும் திரைப்படம்
உலக கோப்பையை வெல்ல முடியாத இந்திய அணி தொடர்ந்து புள்ளிப் பட்டியலில் முதல் இடம் வகித்திருப்பது இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதுபோல, தரவரிசைப் பட்டியலிலும் சூர்யகுமார் முதலிடம் வகிப்பது மேலும், மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
இது போன்ற பல தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.