Reliance Trends: MRP விலையை விட கூடுதல் விலைக்கு விற்றதால் ரூ 2,10,000 அபராதம் விதித்து நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
எம்ஆர்பியை விட கூடுதல் விலைக்கு உள்ளாடையை விற்ற ரிலையன்ஸ் டிரன்ட்ஸ்க்கு ரூ 2,10,000 இழப்பீடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு. 260க்கு விற்கபட வேண்டிய உள்ளாடையை 278க்கு விற்பனை செய்ததாக சிவபிரகாசம் என்பவர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு மாநில நல நிதிக்கு ரூ 2,00,000 லட்சம் ரூபாயும் பாதிக்கப்பட்டவருக்கு 10,000 ரூபாயும் வழங்க உத்தரவு.
ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவில் முன்னணி நிறுவனமாக இருந்து வரும் மிக முக்கிய வணிக நிறுவனமாக உள்ளது. நுகர்வோரின் அனைத்து வித பொருட்களையும் தன் நிறுவனத்தில் வாங்கி பயனடைய வேண்டும் என்று அனைத்து பொருட்களிலும் வணிகத்தை தொடங்கி சிறந்த நிறுவனமாகவும் செயல்பட்டு வருகின்றது.

ரிலையன்ஸ் நிறுவனம் தொலைத்தொடர்பு துறை, ஸ்மார்ட் போன்கள், ஆடைகள், இரும்பு பொருட்கள், சிம் கார்டுகள், வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள் என மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அனைத்து துறைகளிலும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஆடைகளை விற்பனை செய்வதிலும் தனி அக்கரையும் ஆர்வமும் காட்டி வரும் ரிலையன்ஸ் நிறுவனம் அந்த துறைக்கென்று ரிலையன்ஸ் டிரைன்ஸ் என்ற ஷோரும் கடைகளையும் முக்கிய நகரங்களில் தொடங்கி விற்பனை செய்து வருகின்றது. அதிலு அந்நிறுவனம் வெற்றியும் அடைந்து வருகின்றது.
தற்போது, அப்படி ஓரு கடையில் வாங்கிய பொருட்களின் உள்ள விறைபனை விலையை விட அதிகமாக நுகர்வோருக்கு விலையை விதித்தது. அதனால் நுகர்வோர் சிவபிரகாசம் என்பவர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த ஆணையம் அந்நிறுவனத்திற்கு 2,10,000 ரூபாயை அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.