ஆஸ்கர் இறுதி பட்டியலில் ஆர்ஆர்ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் இடம் பெற்றுள்ளது.

0
2

ஆர்ஆர்ஆர்: ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், சமுத்திரக்கனி, அஜய் தேவ்கன் ஆகியோர் நடித்த படம் ஆர்ஆர்ஆர். இப்படம் உலகம் முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல மொழிகளில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் 1000 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை புரிந்துள்ளது. மேலும் இப்படம் பல்வேறு சர்வதேச விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது மட்டுமின்றி பல சர்வதேச விருதுகளையும் வென்றுள்ளது.

சமீபத்தில் ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்திற்காக இயக்குனர் ராஜமவுலி நியூயார்க் பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருதையும், எல்.ஏ பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் விருதையும் வென்றார். இவருக்கு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் 2022ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகளுக்கான இறுதி தேர்வு பட்டியலில் ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் ஒரிஜினல் பாடல் பிரிவில் இடம் பிடித்துள்ளது.

RRR movie's nattu nattu song get placed in final list of Oscar award

இதனால் படக்குழுவுக்கு ரசிகர்கள் பலரும், திரைப்பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர். இந்த படம் திரைக்கு வந்து தியேட்டர்களிலிருந்து எடுக்கப்பட்ட பிறகு ரஷ்யா, ஜப்பான் உள்பட சில நாடுகளில் சமீபத்தில் திரையிடப்பட்டது. அங்கயும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here