நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் ரூபாய் 20 சிறப்பு நுழைவு தரிசனக் கட்டணம் ரத்து

0
7

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் ரூபாய் 20 சிறப்பு நுழைவு தரிசனக் கட்டணம் ரத்து

நாமக்கல் என்றாலே நாமக்கல் ஆஞ்சநேயர் தான் சிறப்பு. நின்ற நிலையில் கைக்கூப்பி வணங்கி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் 18 அடி உயரமுடைய அதிலும் ஓரே கல்லால் ஆன அனுமன் என்றால் நாமக்கல் ஆஞ்சநேயர் தான். இக்கோவில் நகரின் மையப் பகுதியில் இருக்கிறது. பழமை வாய்ந்த சுற்றுலாத் தலமாகவும் இருக்கிறது.

இக் கோயில் விஷ்ணுவின் ஒரு அவதாரமான நரசிம்மர், அனுமன் மற்றும் லட்சுமி தேவிக்குக் காட்சியளித்த இடமாக உள்ளது.

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் ரூபாய் 20 சிறப்பு நுழைவு தரிசனக் கட்டணம் ரத்து
இராமாயண காலத்தில், சஞ்சீவி மூலிகையைப் பெறுவதற்காக, இமயத்தில் இருந்து சஞ்சீவி மலையைப் பெயர்த்து எடுத்துவந்தார் ஆஞ்சநேயர்.பணி முடிந்ததும் மலையை அதே இடத்திலேயே வைத்துவிட்டுத் திரும்பினார்.அவ்வாறு வருகையில் அங்கிருந்து ஒருபெரிய சாளக்கிராமத்தைப் பெயர்த்து எடுத்துவந்தார்.அந்த நேரத்தில் சூரியன் உதயமான படியால், வான்வழியாக வந்துகொண்டிருந்த ஆஞ்சநேயர், தமது கையில் இருந்த சாளக்கிராமத்தைக் கீழே வைத்துவிட்டு சந்தியாவந்தனத்தை முடித்தார்.மீண்டு வந்து சாளக்கிராமத்தைத் தூக்க முயன்றார்.
ஆனால், அதைத் தூக்க அவரால் முடியவில்லை.”இராமனுக்குச் செய்ய வேண்டிய உதவிகளைச் செய்து முடித்துவிட்டு பிறகு வந்து என்னை எடுத்துச் செல்” என்றொரு வானொலி கேட்க, ஆஞ்சநேயரும் சாளக்கிராமத்தை அங்கேயே விட்டு விட்டு கிளம்பினார்.இராமன் போரில் வென்று சீதையை மீட்ட பிறகு ஆஞ்சநேயர் மீண்டும் இங்கே வருகிறார்.ஆஞ்சநேயர் விட்டுப் போன சாளக்கிராமம் நரசிம்ம மூர்த்தியாக வளர்ந்து நிற்க ஆஞ்சநேயர் நரசிம்மரை வணங்கியவாறு நின்று நமக்கெல்லாம் அருள் பாலிக்கிறார்.
இச்சிறப்பு வாய்ந்த கோவிலில் சிறப்பு தரிசன டிக்கடுக்கான 20 ரூபாய் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். இத்திருக்கோவிலின் குடமுழக்கு 33 லட்சம் மதிப்பீட்டில் விரைவில் பணிகள் தொடங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here