10 குழந்தைகளை பெற்றால் 13 லட்சம் பரிசு என்று ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய நாட்டின் மக்கள் தொகையை சரிவை சரிகட்ட 10க்கும் மேற்பட்ட பிள்ளைகளை பெற்றெடுக்கும் தாய் மார்களுக்கு 13,500 பவுண்ட் பரிசுத் தொகையாக அளிக்கப்படும் என ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.
இந்திய மதிப்பில் 13,500 பவுண்ட் என்பது 13 லட்சமாகும். அதாவது 10 வது குழந்தைக்கு ஓரு வயது முடிந்தவுடன் அந்த தாய்மாருக்கு இந்த பரிசுத் தொகை வழங்கப்படும் எனவும் தகவலை அறிவித்துள்ளார்.
ரஷ்ய நாட்டில் சமீப காலத்தில் ஏறப்பட்ட கொரோனா தொற்று மற்றும் உக்ரைன் மீதான தாக்குதல் காரணமாக பல ராணுவ வீரர்களையும் மக்களையும் இழந்து வருகிறது. இதனால் இப்படிப்பட்ட அறிவிப்பை அறிவித்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

ரஷ்யாவின் அரசியல் மற்றும் பாதுகாப்பு நிபுணர் டாக்டர் ஜென்னி மாதர்ஸ் ரஷ்யா நாட்டு ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், 13 லட்சம் பரிசுத்தொகை உடன் மதர்ஸ் ஹீரோயின் என்ற பட்டமும் அளிக்கவிருப்பதாக தெரிவித்துள்ளார்.
கவனிக்கவும்: சென்னை விமான நிலையத்தில் ‘கேப்சூல்’ ஹோட்டல் திறப்பு
மேலும், டாக்டர் மாதர்ஸ், பெரிய குடும்பமாக வாழ்பவர்கள் அதிக நாட்டுப்பற்று உடையவர்கள் என அதிபர் விளாடிமிர் புடின் கருதுவதாக பேட்டியில் தெரிவித்திருந்தார்.
எனவே, ரஷ்யா நாட்டு தாய் ஒருவர் வெற்றிகரமாக 10வது குழந்தையை ஆரோக்கியமான முறையில் ஈன்றெடுக்கும் பொழுது, அவருக்கு அன்னை நாயகி என்ற பட்டமும், ஒரு மில்லியன் ரஷ்ய பணமும் அன்பளிப்பாக அரசு சார்பாக வழங்கப்படும். இதில், குறிப்பிடவேண்டிய தகவல் என்னவெனில், 10 குழந்தைகளும் உயிருடன் இருக்க வேண்டும்.
பரிசுத்தொகை கேட்பதற்கு பெரியதாக இருக்கலாம். ஆனால், அது 10 குழந்தைகளை வளர்க்க போதுமானதாக இருக்குமா? என்பது விவாதப்பொருளாக உருவெடுத்துள்ளது. அதுமட்டுமின்றி, ரஷ்யாவில் நிலவும் பொருளாதார, அரசியல் பிரச்சனைகளுக்கு இடையே இவ்வளவு பெரிய குடும்பத்தை நடத்துவது என்பது மிக மிக கடினமான செயலாகும்.
அனைத்து தகவல்களையும் பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.