சமந்தா: மயோசிடிஸ் எனும் தசை பாதிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் சமந்தா. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து இந்த நோயால் அடிக்கடி பலவீனம் அடைவார்கள். இந்நிலையில் தனது நடிப்பில் வெளியாக உள்ள ‘யசோதா’ படத்துக்காக பேட்டி தந்த சமந்தா கூறியதாவது.
திடீரென இந்த நோயால் பாதிக்கப்பட்டதால் கலக்கம் அடைந்தேன், நாட்கள் கடினமாகவே நகர்ந்தன. ஒரு வகையில் தளர்ந்து போனேன் என்றே சொல்லலாம். இருந்தாலும் போராட்டத்தை விடவில்லை. தொடர்ந்து போராடினேன். யசோதா படத்தின் புரமோஷன் நிகழ்வுகளுக்கு கூட வரமுடியுமா என்ற சந்தேகம் இருந்தது. அதையெல்லாம் மீறி இப்போது பேட்டிக் கொடுத்துக் கொண்டு இருக்கிறேன். இதற்கெல்லாம் இறைவனுக்கு நன்றி சொல்கிறேன். அதே சமயம் எனது நிலைமையைப் புரிந்து எனக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்களை மறக்க மாட்டேன். திரையுலகில் இருந்து எனக்கு ஆறுதல் சொன்ன அத்தனை பேருக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். இப்பொழுது தமிழ், தெலுங்கு மட்டுமின்றி இந்தியிலும் கவனம் செலுத்த தொடங்கியுள்ளேன். அதனால் என்னை நானே மீட்டுக் கொண்டு வர வேண்டிய கடினமான காரியத்தை செய்து கொண்டிருக்கிறேன் என்று சமந்தா கூறினார்.
மேலும் யசோதா படத்தில் சமந்தா ஒரு கர்ப்பிணிப் பெண்ணாக நடித்திருக்கிறார்.இதில் ஒரு வாடகைத் தாயாகவும் உள்ளார். ஒரு வாடகைத்தாய் பணத்திற்காக ஏமாற்றப்படுவதை எதிர்த்து போராடும் பெண்ணாக சில சண்டைக் காட்சிகளிலும் நடித்துள்ளார். இக்காட்சிகள் ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டரால் சமந்தாவிற்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதில் வரலட்சுமி சரத்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் ஒரு பான் இந்தியா படமாக உருவாகி அனைத்து மொழிகளிலும் வெளியிடப்பட உள்ளது.