“Rising icon of Tamilnadu politics” என்ற விருது ‘India Media Award’ சார்பாக சீமானுக்கு வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டில் சிறந்த ஆளுமைக்களுக்கான இந்திய விருது வழஙகும் குழுமம் முன்னின்று நடத்தும் விருதுகள் வழங்கும் விழாவில் நாம் தமிழர் கட்சி தலைமை ஓருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
சீமான் சிவகங்கை மாவட்டம் அரனையூரை சார்ந்தவர் இயக்குனர் பாரதிராஜா மற்றும் மணிவண்ணன் படங்களின் வழியாக கவர்ந்து இழுக்கப்பட்டு இயக்குனராக பயணத்தை தொடர்ந்தார். பாஞ்சாலங்குறிச்சி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
படங்கள் இயக்குவதை சிறிது காலம் ஓதுக்கி இலங்கை தமிழர்கள் மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் உரிமைகளுக்காக பிரச்சாரகராக அறியப்படும் சீமான், 1958ல் ஆதித்தனாரால் உருவாக்கப்பட்ட நாம் தமிழர் இயக்கத்தை 18 மே 2010ல் நாம் தமிழர் கட்சியாக மாற்றினார்.

அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் சீமான், மற்ற முக்கிய அரசியல் கட்சிகளில் இருந்து வேறுபட்டு மாற்று அரசியலை வழங்கும் கட்சியாக இது இருக்கும் எனவும், சுதந்திர தமிழீழம் அமைப்பது இக்கட்சியின் குறிக்கோளாக மட்டும் இல்லாத, ஒட்டுமொத்த தமிழர்களின் எண்ணமாக இருக்கிறது என கூறுகிறார்.
சுவாரஸ்ய தகவல்கள்:
1. 2016ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நாம்தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது.
2. இவரது கட்சிக்கொடியும் தமிழீழ கொடியும் ஒரு மாதிரி உள்ளன. சோழர்கள் மற்றும் விடுதலைபுலிகளின் சின்னமாக புலி இருந்துள்ளது.
3. 2016 தேர்தலில் முதல்வர் ஜெயலலிதாவிற்கும் ஆளும் அதிமுகவிற்கும் தனது ஆதரவை வழங்கினார். இதற்கு அவரது கட்சி உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்தனர் மற்றும் அவரது கட்சியின் இளைஞர் அமைப்பின் தலைவர் அதனை கடுமையாக எதிர்த்தார்.
4. மார்க்சிஸ்ட் கட்சியின் அருணனிடம் வெளிப்படையாக சவால் விட்ட சீமான், 2016 தேர்தலில் மக்களநலகூட்டணியை விட அதிக ஓட்டு வாங்கவில்லை எனில் கட்சியை கலைத்துவிட்டு மார்க்சிஸ்ட் கட்சியில் இணைவதாக கூறினார்.
இப்படியாக அரசியலில் சீமான் தனி ஓரு நபராக இருந்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் அவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.