மனைவியுடன் ப்ரின்ஸின் முதல் காட்சியை காண வந்த சிவகார்த்திகேயன்

0
3

மனைவி ஆர்த்தியுடன் சென்னையில் புகழ் பெற்ற திரையரங்கமான ரோகினி தியேட்டரில் ரசிகர்களோடு சேர்ந்து ப்ரின்ஸ் படத்தின் முதல் காட்சியை காண வந்துள்ளார் சிவகார்த்திகேயன்.

தீபாவளியை முன்னிட்டு இன்று நடிகர் கார்த்தியின் சர்தார் திரைப்படம் வெளியானது. இப்படத்தை பி.எஸ். மித்ரன் இயக்கியுள்ளார். இப்படம் கார்த்தி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் இன்று வெளியாகி ரிசிகர்களிடன் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அதை போல தீபாவளி அன்று வெளியாகும் சிவகார்த்திகேயனின் முதல் படமான ப்ரின்ஸ் திரைப்படம் ரிசிகர்களின் ஆராவாரத்திற்க்கு இடையே திரையரங்குகளில் வெளியாகியது. இப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தியுடன் சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கிற்கு வந்து முதல் காட்சியை ரசிகர்களுடன் பாடலுக்கு ஆடிபாடி ரசிகர்களுடன் ரசிகராக தன் படத்தை தானே திரையரங்கில் கண்டு களித்துள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து கொண்டாடி வருகின்றனர்.

இதற்குமுன் நடித்த டாக்டர் மற்றும் டான் படங்கள் ரசிகர்களிடையே பெரும் வெற்றியை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கியுள்ளார்.

மனைவியுடன் ப்ரின்ஸின் முதல் காட்சியை காண வந்த சிவகார்த்திகேயன்

ப்ரின்ஸ் கதைச் சுருக்கம்:

தேவக்கோட்டை எனும் ஊரில் சுதந்திரத்திற்கு பின்னும் பிரெஞ்சுகாரர்களும், பிரிட்டிஷ்காரர்களும் சிலர் இந்தியாவிலேயே தங்கி விடுகின்றனர். அப்படி ஒரு குடும்பத்து பெண்ணான ஜெஸிகாவை (மரியா) பள்ளியில் சமூக அறிவியல் வாத்தியாரான அன்பு (சிவகார்த்திகேயன்) காதலிக்க தொடங்க ஆரம்பத்தில் பிரெஞ்சுக்கார பெண் என ஓகே சொல்லும் அப்பா சத்யராஜ், பின்னர் அந்த பெண் பிரிட்டிஷ்காரி என்பது தெரிய வர மறுப்பு தெரிவிக்கிறார். ஹீரோயின் அப்பாவும் எதிர்ப்பு. இறுதியில், இந்திய வாலிபனும் இங்கிலாந்து பூர்வகுடியான இளம்பெண்ணும் சேர்ந்தார்களா? இல்லையா? என்பது தான் பிரின்ஸ் படத்தின் கதை.

இப்படத்தில் ப்ரேம்ஜி அமரன் மற்றும் சத்தியராஜ் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்நிலையில், ரசிகர் ஷோவை சிவா தன் மனைவியுடன் ரோகினி திரையரங்கிற்கு வந்து படம் பார்த்தது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here