தீபாவளியன்று சரவெடியாய் வெடிக்க வருகிறது பிரின்ஸ் திரைப்படம் படக்குழு அறிவிப்பு. சிவகார்த்திகேயனின் டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் தொடர்ந்து வெற்றி படங்களாக அமைந்து 100 கோடிகளுக்கும் மேல் வசூலில் சாதனை படைத்துள்ளது. அதைனை தொடர்ந்து வரும் சிவகார்த்திகேயன் படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை எதிர்நோக்கி காத்துக் கொண்டு இருக்கின்றனர் ரசிகர்கள்.
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது 5 புதிய திரைப்படத்தை கைவசம் வைத்து இருக்கிறார். அசோக் இயக்கத்தில் சிங்கப்பாதை, ராஜ்குமார் இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு படம், ராம்குமார் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு படம், வேல்ஸ் பிலிம்ஸ் மற்றும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தலா ஒரு படம் என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார்.

பிரின்ஸ் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் என இருமொழிகளில் தயாராகி வருகிறது. தமன் இசையில் மனோஜ் பரமஹம்சா ஓளிப்பதிவு செய்திருக்கிறார். சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது பிரின்ஸ் படம் தயாராகி வருகிறது. இப்படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கி உள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டு நடிகை மரியா நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தில் டூரிஸ்ட் கைடாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இப்படம் வருகிற ஆகஸ்ட் 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் ஓருசில காரணங்களுக்காக ரீலிஸ் தேதி மாறி போவதாக அறிவிக்கப்பட்டது. அக்டோபர் மாதம் தீபாவளி அன்று ரீலிஸ் ஆகும் என பிரின்ஸ் திரைப்படக்குழு அறிவித்துள்ளது. தீபாவளி அன்று அஜித்தின் ஏகே 61 மற்றும் கார்த்திக்கின் சர்தார் என தீபாவளி அன்று சரவெடியாய் அனைத்து திரையங்கிலும் வெடிக்க வருகிறது.