இந்திய கால்பந்து கேப்டன் சுனில் சேத்ரிக்கு பிஃபா (FIFA) கௌரவப்படுத்தியுள்ளது.
கால்பந்தாட்டம் உலக அளவில் பெயர் பெற்றது. கிரிக்கெட் விளையாட்டை விட மிகப் பெரியதாக கருதப்படுகிறது. இந்திய மக்களிடம் அதிக நாட்டம் உடைய விளையாட்டு என்றால் அது கிரிக்கெட் அதை மட்டுமே பெரிதாக நினைத்து பார்த்துக் கொண்டும் விளையாடி கொண்டும் வருகின்றனர். ஆனால், உலக அளவில் மிகவும் பெயர் பெற்றது கால்பந்து ஆட்டம் தான்.
இந்த கால்பந்து ஆட்டத்தின் இந்தியாவின் உயிர் நாடியாக இருப்பவர் சுனில் சேத்ரி ஆவார். இவர் 2005 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் போட்டிகளில் அறிமுகமாகி இந்திய அணிக்காக தன் முதல் கோலை அடித்து பெயர் பெற்றார். அன்று முதல் இன்று வரை இந்திய கால்பந்து ஆட்டத்தின் கேப்டனாக இருந்து அணியை சிறப்பாக வழிநடத்தி செல்கிறார்.

தற்போது சுனில் சேத்ரியின் சிறப்பான ஆட்டத்தை பாராட்டி சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு அவரை கௌவரவித்துள்ளது. சர்வதேச கால்பந்து போர்ச்சுகல் நாட்டின் கேப்டன் கிஸ்டினோ ரொனால்டோ 117 கோல்களுடன் முதல் இடத்திலும், அர்ஜன்டினா கேப்டன் லயோனஸ் மெர்சி 90 கோல்களுடன் இரண்டாவது இடத்திலும், 131 ஆட்டங்களில் 84 கோல்கள் அடித்து இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி மூன்றாவது இடத்திலும் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் என்ற சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்: துரந்த கால்பந்து கோப்பை: சுனில் சேத்ரியின் பெங்களூர் அணி வெற்றி
ரொனாலடோ மற்றும் மெர்சி கால்பந்து வீரர்களில் அதிகம் அறியப்பட்டவராக உள்ளனர். மூன்றாவதாக இடம் பெற்றுள்ள சுனில் சேத்ரி அவர்களுடன் இணைந்திருப்பது இந்தியாவிற்கே பெருமையாக உள்ளது.
இந்நிலையில், சுனில் சேத்ரியை கௌவரவிக்கும் வகையில் கேப்டன் ஃபென்டாஸ்டிக் என்ற 3 எப்பிசோடுகளை பிஃபா வெளியிடுகிறது. இந்தியா இதுவரை பிஃபா போட்டியில் தகுதி பெறாவிட்டாலும் உலக அளவில் அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார். இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி. இந்த எபிசோடு சிறப்பாக விளையாடியதற்காக அந்த அமைப்பு அவரை கௌரவிக்கிறது.
இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை படியுங்கள்.