சூர்யா 42 படத்தின் புதிய அப்டேட் ரசிகர்கள் கொண்டாட்டம்

0
3

சூர்யா 42 படத்தினை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்குகின்றார் இப்படத்தின் முதல் பாதி படப்பிடிப்பு கோவா மற்றும் சென்னை பகுதிகளில் முடிந்துள்ள நிலையில் மீதம் இருக்கும் படப்பிடிப்பு காட்சிகள் இலங்கையில் நடைபெற இருப்பதாக தகவல்.

சிறுத்தை, வீரம், விஸ்வாசம், அண்ணாத்த படங்களை தயாரித்து வெற்றி கண்ட சிவா தற்போது நடிகர் சூர்யாவை வைத்து படம் இயக்கி வருகிறார். தற்போதைக்கு இப்படத்தின் பெயர் சூர்யா 42 என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை ஸ்டியோ கீரின் மற்றும் யுவி கிரியோஷன் தயாரித்து வருகின்றது.

இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகையான திஷா பத்தானி நடித்துள்ளார். மேலும், யோகிபாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த ராஜ் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. மேலும், சூர்யா 42 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் கோவா மற்றும் சென்னையில் நிறைவடைந்ததாக கூறப்படுகிறது.

சூர்யா 42 படத்தின் புதிய அப்டேட் ரசிகர்கள் கொண்டாட்டம்

அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற இருப்பதாக தகவல் வந்துள்ளது. அங்கு 60 நாட்கள் படபிடிப்பு நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் 1000 வருடங்கள் பழமையான கதையை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. கோவாவில் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், அடுத்த சில நாட்களில் படத்தின் அடுத்த அட்டவணை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்: பத்து தல படத்திற்கு பிறகு பிரபல இயக்குனருடன் கைகோர்க்கும் சிம்பு

இப்படம் வரலாற்று படமாக இருப்பதால் அனைவரும் விரும்பி பார்க்கும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்படி இருந்தாலும் நடிகர் சூர்யா இயக்குனர் சிவா இணைந்துள்ள படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்க்க காத்திருக்கின்றனர்.

இது போன்ற பல தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here