வணங்கான் படத்திலிருந்து சூர்யா திடீர் விலகல் – இயக்குனர் பாலா அறிக்கை

0
16

வணங்கான்: பாலா இயக்கத்தில் கடந்த 2001ல் ‘நந்தா’, 2003ல் ‘பிதாமகன்’ ஆகிய படங்களில் நடித்தார் சூர்யா. பிறகு 2005ல் பாலா இயக்கிய ‘மாயாவி’ படத்தில் சூர்யா, ஜோதிகா இருவரும் இணைந்து நடித்தனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூர்யா பாலா இயக்கும் ‘வணங்கான்’ படத்தில் ஒப்பந்தமானார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்தார். இப்படத்தின் ஷீட்டிங் சில நாட்கள் வெளியூரில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் படப்பிடிப்புக்கு இடையில் அடிக்கடி சூர்யாவுக்கும், பாலாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அதனால் படப்பிடிப்பு தடைப்பட்டு வந்ததாகவும் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் தற்போது சூர்யா வணங்கான் படத்திலிருந்து விலகி உள்ளார். இது குறித்து படத்தின் இயக்குனர் பாலா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது.

surya exits director bala's vanangan movie

சூர்யாவுடன் இணைந்து ‘வணங்கான்’ என்ற படத்தை இயக்க விரும்பினேன். ஆனால் கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களால் இந்த கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமோ என்ற சந்தேகம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது. என் மீதும், இந்த கதையின் மீதும் சூர்யா முழு நம்பிக்கையுடன் இருக்கிறார். இவ்வளவு அன்பும், மதிப்பும், நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு ஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்மசங்கடம் கூட நேர்ந்துவிடக் கூடாது என்பது எனது கடமையாகவும் இருக்கிறது. எனேவ, ‘வணங்கான்’ படத்தில் இருந்து சூர்யா விலகிக்கொள்வது என்று நாங்கள் இருவரும் கலந்து பேசி ஒரு மனதாக முடிவு செய்துள்ளோம். இதில் எனக்கு மிகவும் வருத்தம் தான் என்றாலும் அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது. ‘நந்தா’, ‘பிதாமகன்’ போல் வேறொரு தருணத்தில் மீண்டும் நாங்கள் உறுதியாக இணைவோம். மற்றபடி வணங்கான் பணிகள் தொடரும்’ என்று அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here