டி20 உலக கோப்பை போட்டிகளில் 1000 ரன்களை கடந்து சாதனை படைத்தார் சூர்யகுமார் யாதவ். அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது இந்திய அணி.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த டி20 உலக கோப்பை போட்டிகள் விறுவிறுப்பான சூழ்நிலையில் சூப்பர் 12 சுற்றுகள் முடிந்து அரையிறுதிக்கு அணிகள் சென்றுள்ளன. நேற்றுடன் சூப்பர் 12 சுற்றுக்கான தகுதி போட்டிகள் முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதில் நேற்று மெல்பேனில் நடைபெற்ற ஜிம்பாப்பே அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் இந்தியா அரையிறுதிக்கு செல்வது உறுதியாகி உள்ளது.
இந்த போட்டியில் டாசை வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தது. கே.எல்.ராகுல் மற்றும் சூர்யகுமார் அரைசதத்தால் 20 ஓவர் முடிவில் 186 ரன்களை இந்திய அணி குவித்தது. இதில் ராகுல் 35 பந்துகளில் 51 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டாகி வெளியேறினார். கோலி 26 ரன்கள் மட்டுமே எடுத்தார். பின் வந்த சூர்யகுமார் யாதவ் சிம்பாபாபே அணியினரின் பந்துவீச்சுகளை நாலாபுறமும் தொடர்ந்து அதிரடி காட்டி 25 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார்.

இதன் மூலம் நடப்பு ஆண்டு தொடர்களில் 1,026 ரன்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். மேலும், நடப்பு ஆண்டில் 28 போட்டிகளில் 1,026 எடுத்து இரண்டாவது வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார். முதலாவதாக இவர் கடந்த ஆண்டு 29 போட்டிகளில் 1326 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் உள்ளார்.
சிம்பாபே அணியினர் 187 ரன்களை நோக்கி ஆடத் தொடங்கினர் அதில் 115 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது 17.2 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஜிம்பாப்பே அணி தோல்வியை தழுவியது.
இந்த போட்டியில் அதிரடியான ஆட்டத்தை இந்திய அணிக்கு தந்த சூர்யகுமாரை ரசிகர்கள் அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். குரூப் ஏ பிரிவில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
குரூப் பி பிரிவில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தககது.