டி20 உலக கோப்பை 2022: பங்களாதேஷ்வுடனான போட்டியில் இந்தியா வெற்றி விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் அரைசதத்தால் வெற்றி பெற்றது.
மழைக் காரணமாக பாதிக்கப்பட்ட போட்டியில் இறுதியாக 16 ஓவர்கள் முடிவில் 150 ரன்கள் இலக்காகை பங்களாதேஷ் அணி வீரர்கள் எடுக்க முடியாமல் 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. உலக கோப்பை டி20 போட்டிகள் இந்தாண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி இதுவரை நடந்த உலக கோப்பை போட்டிகளில் 3 போட்டிகளில் 2 ல் வெற்றி பெற்று சூப்பர் 12 சுற்று இறுதி போட்டிக்கு தகுதி பெறுமா என்ற சந்தேகம் எழுந்த நிலையில் இன்று போட்டியில் வென்றதன் மூலம் இந்தியா அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
ஏனெனிலும், இனி வரும் போட்டிகளும் மிக இந்திய அணிக்கு மிக முக்கியமானதாக இருக்கின்றது. ஏனெனில் குரூப் பியில் தென்னாப்பிரிக்கா முதல் இடத்தில் வருவது குறிப்பிடத்தக்கது.

இன்று நடைபெற்ற அடிலைட் மைதானத்தில் முதலாவதாக டாசை வென்ற பங்களாதேஷ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனை அடுத்து இந்திய வீரர்களின் முதல் பேட்டர்கள் களம் இறங்கினர். இதில் கேப்டன் ரோஸ்ஹூத் 2 ரன்களில் ஆட்டம் இழந்தார். கே.எல் ராகுல் அரைசதம் கடந்தவுடன் விக்கெட்டை பறிகொடுத்தார். பின் வந்த விராட் மற்றும் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடினர். 15 பந்துகளில் 31 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சூர்யகுமார் அவுட்டாகி வெளியேறினார்.
பின் வந்த பேட்டர்கள் சரியாக விளையாடததால் சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறினர். இறுதியாக அஸ்வின் 6 பந்துகளில் 1 ஃபோர் 1 சிக்ஸ் அடித்து 13 ரன்கள் எடுத்திருந்தார். இறுதி வரை விளையாடிய விராட் கோலி 44 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து இந்திய அணியின் ரன் ரேட்டிற்கு உதவினார்.
20 ஓவர் முடிவில் இந்திய அணி 184 ரன்கள் எடுத்திருந்தது. மழைக் காரணமாக பங்களாதேஷ் அணியினருக்கு 16 ஓவர்களில் 150 ரன்கள் இலக்காக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து விளையாடி வந்த பங்களாதேஷ் அணியினர். முதலில் அதிரடியாக விளையாடினர்.
இறுதியாக, 16 ஓவர்கள் முடிவில் 145 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவினர். இதனால் இந்தியா வெற்றி பெற்றது.