ஓடிடி மற்றும் திரையரங்குகளில் இந்த வாரம் வெளியாகும் தமிழ் திரைப்படங்கள்

0
2

ஓடிடி மற்றும் திரையரங்குகளில் இந்த வாரம் வெளியாகும் தமிழ் திரைப்படங்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

உதயநிதி ஸ்டாலினின் கலகத் தலைவன் திரைப்படம் 18ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை தடம், மீகாமான், தடையற தாக்க படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். வில்லனாக பிக்பாஸ் பிரபலம் ஆரவ் நடித்திருக்கிறார். உதயநிதியின் ரெட் ஜெயின்ட் மூவிஸ் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இயக்குனரும் நடிகருமான சசிக்குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் நான் மிருகமாய் மாற என்ற திரைப்படம் இப்படத்தை கழுகு படத்தை இயக்கிய சத்ய சிவா இயக்கியுள்ளார். குடும்ப பின்னணியில் உருவாகும் பிரச்சனையை கொண்டு பின் சாதாரண மனிதன் மருகமாய் மாறும் கதை அம்சத்தில் கதைகளம் அமைந்து இருக்கிறது. கதநாயகியாக ஹரி பிரியா நடித்துள்ளார். விக்ராந்த், சரத், அம்பானி, சங்கர் என பலர் முக்கிய கதாபாததிரத்தில் நடித்துள்ளனர். இப்படமும் 18ந் தேதி திரையரங்குகளில் ரிலிஸாகிறது.

ஓடிடி மற்றும் திரையரங்குகளில் இந்த வாரம் வெளியாகும் தமிழ் திரைப்படங்கள்

நடிகர் கதிர் நடித்துள்ள படம் யூகி இப்படத்தை ஜாக் ஹாரிஸ் இயக்கியுள்ளார். செந்தூர் பிலீம்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தில் ஆனந்தி, நடராஜன் சுப்பிரமணியம், நரேன், பவித்ர லட்சுமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரஞ்சன் ராஜ் இசையமைத்துள்ளார். இந்த படமும் 18ந் தேதியான இன்று வெளியாகி உள்ளது.

குக்வித் கோமாளி புகழ் அஸ்வின் நடிப்பில் உருவாகியுள்ள படம் செம்பி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கோவை சரளா இதுவரை திரையில் வராத வேடத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார். பிரபு சாலமன் இயக்கியுள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது அஸ்வின் கண் கலங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த படமும் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிறது.

சதீஷ் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் சதீஷ் ராமகிருஷ்ணன், சாத்விகா அப்பையா, கிரிஸ்டல் இமேரா, மகேந்திர மாசனையன், சரவணன் ராதாகிருஷ்ணன், திருலோக சந்தர் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘2323: தி பிகினிங் (The Beginning)’. இத்திரைப்படம் இன்று (நவம்பர் 18ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகிறது.

ஓடிடியில் வெளியாகும் படங்கள்:

அனல் மேலே பனித்துளி படத்தில் நடிகை ஆண்ட்ரியா நடித்துள்ளார். இந்த படத்தை கெய்சர் ஆனந்த் இயக்க, இயக்குனர் வெற்றிமாறன் தயாரித்துள்ளார். இந்த படம் வருகிற இன்று 18-ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் நேரடியாக ரிலீஸ் ஆகிறது.

அஞ்சலி மேனன் இயக்கத்தில் நதியா, நித்யா மேனன், பார்வதி, பத்மப்ரியா, சயனோரா பிலிப், அர்ச்சனா பத்மினி, அம்ருதா சுபாஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்  ஓன்டர் வுமன் (Wonder Women). கர்ப்பமாக இருக்கும் பெண்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் இன்று (நவம்பர் 18ம் தேதி) ‘SonyLiv’ ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது.

இதையும் படியுங்கள்: நயன்தாராவின் பிறந்தநாளில் வெளியாகும் புதிய அப்டேட் விக்னேஷ்சிவன்

இது போன்ற பல தகவல்களை தெரிந்து கொள்ள தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here