இந்தியாவின் 75வது கிராண்ட் மாஸ்டராகவும் தமிழகத்தின் 27வது கிராண்ட் மாஸ்டராகவும் தமிழகத்தின் பிரணவ் வெங்கடேஷ் தேர்வு.
சர்வதேச செஸ் கூட்டமைப்பின் கீழ் 2500 புள்ளிகளை கடந்து கிராண்ட்மாஸ்டர்களாக திகழும் 3 செஸ் வீரர்களை தொடர்ச்சியாக வீழ்த்தி வெற்றி பெற்றால் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெறலாம். அந்த 3 கிராண்ட்மாஸ்டர்களும் வெவ்வேறு நாடுகளை சேர்ந்தவர்களாக இருக்கவேண்டும்.
அந்த வகையில் 2500 புள்ளிகள் பெற்று இந்தியாவின் 75வது மற்றும் மாநில அளவில் 27வது கிராண்ட் மாஸ்டராகவும் உயர்ந்துள்ளார் பிரணவ் வெங்கடேஷ். இந்தியாவில் இதுவரை 74 கிராண்ட் மாஸ்டர்களும் தமிழகத்தில் 26 கிராண்ட் மாஸ்டர்களும் இருந்த நிலையில் இவர் உயர்ந்து தனது இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் பல்வேறு போட்டிகளில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார். 2014ல் பள்ளிக்களுக்கு இடையே நடந்த போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றார். தொடர்ந்து 2015ல் 9 வயதுக்குட்பட்டோர் பிரிவில் தேசிய அளவில் சாம்பியன் பட்டம் வென்றவர். அதை தொடர்ந்து தற்போது கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்றுள்ளார்.
இதை போன்று 2700 புள்ளிகள் பெற்றவர்கள் சூப்பர் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றவர்கள் என்னும் பட்டம் கிடைக்கும். இதுவரை இந்தியாவில் 6 பேர் மட்டுமே சூப்பர் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றுள்ளனர்.
இச்சிறுவயதிலேயே செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் கிடைப்பது இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெரும் பெருமைக்குரியதாக உள்ளது. இந்நிலையில், சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணை தலைவராக தமிழகத்தை சார்ந்த 5 முறை உலக சாம்பியன் ஷிப் பட்டத்தை வென்ற விஸ்வநாத் ஆனந் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.