பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்து மாணவர்களோடு அமர்ந்து உணவை உண்டும் உணவை குழந்தைகளுக்கு ஊட்டியும் மகிழ்ந்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
மதுரை: அரசு முறை பயணமாக சென்ற தமிழக முதல்வர் ஸ்டாலின். முன்னால் தமிழக முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்த நாளையொட்டி பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். முன்னதாக நெல்பேட்டையில் உள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர்களை தூவி வணங்கினார்.
அதன்பின், ஆதிமூலம் அரசு பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். குழந்தைகளுக்கு உணவினை பரிமாறியும் அந்த குழந்தைகளுடன் அமர்ந்து உணவை உண்டும் உணவை பிற குழந்தைகளுக்கு உணவை ஊட்டியும் அவர்களுடன் பேசியும் அன்புடன் பழகினார்.

பின்னர் பேசிய அவர், காலை உணவு வழங்கும் திட்டம் வரலாற்றில் நிலைத்து நிற்கும் திட்டம் என பெருமையுடன் கூறினார். தன் வாழ்நாளில் பொன்னாள் என்று கூறும் அளவுக்கு இந்த நாள் அமைந்துள்ளதாகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். பள்ளிக்கு பசியோடு வரும் பிள்ளைகளுக்கு முதலில் உணவு வழங்கிய பிறகு வகுப்பறைக்கு செல்லும் வகையில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
முதலாவதாக நெல்பேட்டை பகுதியில் உள்ள குழந்தைகள் சமையல் அறையை கவனித்தும் சமையல் கலைஞர்களிடம் உணவின் தரம் பற்றியும் காய்கறிகள் தரமானதாகவும் சுத்தமாகவும் குழந்தைகளுக்கு வழங்கிட வேண்டும் என்று கூறி அவ்விடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
அவருடன் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பி.டி.ஆர். தியாகராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் என பலர் இருந்தனர். இத்திட்டம் இன்று தொடங்கப்பட்ட திட்டம் நாளை அனைத்து மாவட்ட அமைச்சர்கள் முன்னிலையில் 1 முதல் 5 வரை பயிலும் அனைத்து குழந்தைகளுக்கும் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.