கோவில்களுக்கு வரும் பக்தர்கள் ஜூன்ஸ், டி-சர்ட், லெகின்ஸ், சார்ட்ஸ் போன்ற உடைகளை அணிந்து கோவில்களுக்கு வருவதை ஏற்க முடியவில்லை. கோவிலுக்கு வருபவர்கள் நாகரீக உடைகளை அணிந்து வருவது ஏற்புடையது. மேலும், கோவில்கள் சுற்றுலா தலங்கள் அல்ல என்றும் மதுரை உயர்நீதி மன்ற கிளை ஆதங்கம்.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் அர்ச்சகர் முதல் பக்தர்கள் வரை கோவிலில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என இந்தி அறநிலைய துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அப்படி கோவிலில் செல்போன் பயன்படுத்தினால் அந்த செல்போனை பறிமுதல் செய்து திரும்பவும் உரியவரிடம் கொடுக்க கூடாது என்றும் உத்தரவு.
கோவிலுக்கு வருவோர் நாகரீகமான உடைகளை அணிந்து வர வேண்டும். கோவில்கள் ஓன்றும் சுற்றுலா தலங்கள் அல்ல. ஜீன்ஸ், டிசர்ட், லெகின்ஸ், சார்ட்ஸ் போன்ற உடைகளை அணிந்து வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுரை. தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை உள்ளது அது மிகவும் தவறான போக்கு இதை மாற்ற வேண்டும்.

திருமலை திருப்பதியில் வாசலில் நின்று புகைப்படம் எடுக்க முடியாது ஆனால், இங்கு கருவரை வரை சென்று செல்ஃபி புகைப்படம் எடுக்கின்றனர். கோவில் அர்ச்சகர்களே புகைப்படம் எடுத்து தங்களின் தனிப்பட்ட யூடிப் சேனல்களில் பதிவிடுகின்றனர். இது மிகவும் தவறான செயலாக கருத வேண்டும் என்றும் மதுரை உயர்நீதி மன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது போன்ற செயல்களால் கோவிலின் புனிதம் கெட்டு போய் உள்ளதை சுட்டி காட்டிய மதுரைக் கிளை கோவிலின் புனிதம் காக்க உறுதியேற்க வேண்டும் என்றும் கூறினார்.
இது போன்ற பல தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.