Home செய்திகள் தலைவரின் 169 வது படத்தின் டைட்டிலை வெளியிட்டது சன் பிக்சர்ஸ்

தலைவரின் 169 வது படத்தின் டைட்டிலை வெளியிட்டது சன் பிக்சர்ஸ்

0
8

தலைவரின் 169 வது படத்தின் டைட்டிலை வெளியிட்டு மாஸ் காட்டியது சன் பிக்சர்ஸ் நிறுவனம். 

தலைவரின் 168 வது படத்தை இயக்கிய சிறுத்தை சிவா திரைப்படம் தான் ‘அண்ணாத்த’ படத்தைப் பொறுத்த அளவில் அண்ணன் தங்கை பாசம் உடைய படமாக இருந்தது. பட்த்தின் கதை சலசலப்பாக ரசிகர்கள் பேசினாலும் நல்ல வசூலிலைப் பெற்றது.

அண்ணாத்த ரஜினியின் 168 ஆவது தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்தை சிவா எழுதி, இயக்கி சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது .அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நயன்தாரா, மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இமான் இசையில் உருவாகி அனைவரையும் கவர்ந்தது. கடந்த ஆண்டு நவம்பரில் வெளியாகியது.

தலைவரின் 169 வது படத்தின் டைட்டிலை வெளியிட்டது சன் பிக்சர்ஸ்

169 வது படத்தை நெல்சன் இயக்க உள்ளார் என்றும் கூறப்பட்டு வந்தது. இதற்கிடையில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட் பல கலவையான விமர்சனங்களைப் பெற்றதால் தலைவர் ரஜினிகாந்த் இயக்குனர் நெல்சன் திலிப் குமார் கதையை மறுப்பதாக சமூக வலைதளங்ககளில் வதந்திகள் வந்தது. அதனை பொய்ப்பிக்கும் வகையில் நெல்சனை அழைத்து ரஜினி பேசினார் என்பதும் எல்லோரும் அறிந்ததே.

தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் தீலிப் குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படத்தின் பெயரை அறிவித்தது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தலைவர் ரஜினிகாந்த்தின் 169 வது படத்தின் பெயர் ஜெயிலர் என்றும் தற்போது இசையில் அனைத்து படங்களிலும் கலக்கி வரும் அனிருத் ரவிச்சந்திரன் என்றும் அறிவித்தது சன் குழுமம். இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் முதல் நடைபெறும் என்றும் தகவல் வந்துள்ளது.

நெல்சன் தீலிப் குமார் விஜயின் நடிப்பில் உருவான திரைப்படத்திற்கு 8 கோடி சம்பளமாக பெற்றார். தலைவர் 169 வது ரஜினி பட்த்திற்காக நெல்சன் 12 கோடி சம்பளமாக பெற்றுள்ளார். ஆகவே தலைவரின் திரைப்படம் பெரும் மாசாக இருக்கும் என ரசிகர் பட்டாளங்கள் இப்படத்தின் பெயரை கொண்டாடி வருகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here