விராட் கோலியின் வாழ்க்கை கதையில் நடிக்க ஆசை இருப்பதாக தெலுங்கு நடிகர் விஜய்தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.
விராட் கோலி இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக இருப்பவர். பேட்டிங், பீல்டிங் என அனைத்திலும் திறமையானவர். இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிலும் சில ஆண்டுகள் இருந்தார். அவர் கேப்டன் பொறுப்பில் இருந்த பொழுது இந்திய அணி பல போட்டிகளில் தோல்வி தழுவியது அதுமட்டும் இல்லாமல் அவரும் சரியாக தன் விளையாட்டை ஆட முடியாத நிலை இருந்தது.
அதனால் அவரை பலரும் பலவாறு பேசி வந்தனர். அதனால் அவர் கேப்டன் பதவியை துறந்தார். பின் அணிக்காக விளையாட ஆரம்பித்தும் சரியாக அவரால் முன்பை போல விளையாட முடியவில்லை. கடந்த 3 வருடங்களாக ஓரு சதம் கூட அடிக்கவில்லை என்று அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால் ஓரு மாத காலம் ஓய்வு அளிக்கப்பட்டது. ஓரு மாதம் என் வாழ்வில் நான் ஓருமுறைக் கூட பேட்டை தொடவில்லை என்றும் தான் மனரீதியாக பாதிக்கப்ப்டடு உள்ளேன் என்றும் வெளிப்படையாக கூறி இருந்தார். இருப்பினும் ஆசிய கோப்பைக்கான பாகிஸ்தானுடன் விளையாடிய போட்டியில் 35 ரன்கள் எடுத்து கொடுத்தார்.
ரசிகர்கள் அவரை பாமுக்கு வர வேண்டும் என ஆவலுடன் காத்துகிடக்கின்றனர். சதம் அடிக்கவில்லையே தவிர அனைத்து மேச்சிலும் சராசரி ரன்களை எடுக்கிறார். இனிவரும் போட்டிகளிலும் நல்ல ரன்கள் அடிப்பார் என்று எதிர்பார்போம்.
இதையும் படியுங்கள்: புல்புல் என்னும் கொண்டைக்குருவி பற்றிய சுவாரசிய தகவல்கள்
இந்நிலையில், கிரிக்கெட் வீரர்கள் டோனி, சச்சின் தெண்டுல்கர் வாழ்க்கை கதைகள் திரைப்படங்களாக வந்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளன. டோனி படத்தில் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் நடித்து இருந்தார். கிரிக்கெட் வீரர் கபில்தேவ் வாழ்க்கை 83 என்ற பெயரில் படமாக வந்தது. இந்திய கிரிக்கெட் அணி கபில்தேவ் தலைமையில் உலக கோப்பையை வென்ற நிகழ்வை இந்த படத்தில் காட்சிப்படுத்தி இருந்தனர். இதில் கபில்தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடித்து இருந்தார்.
தற்போது விராட் கோலி வாழ்க்கையை படமாக்கும் முயற்சிகளும் நடந்து வருகின்றன. இதில் விராட் கோலி பாத்திரத்தில் நடிக்க விஜய்தேவரகொண்டா விருப்பம் தெரிவித்து உள்ளார். துபாய் சென்ற விஜய்தேவரகொண்டாவிடம் நீங்கள் எந்த கிரிக்கெட் வீரர் வாழ்க்கை கதையில் நடிக்க ஆர்வப்படுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து விஜய்தேவரகொண்டா கூறும்போது, ”கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை கதையில் சுஷாந்த் சிங் ராஜ்புத் ஏற்கனவே நடித்து விட்டார். எனக்கு விராட் கோலி வாழ்க்கை கதை படத்தில் நடிக்க ஆர்வம் உள்ளது. வாய்ப்பு கிடைத்தால் விராட் கோலியாக நடிப்பேன்” என்றார்.