கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அமைந்துள்ள ஆலமரத்து துரளெபதி அம்மன் திருவிழாவில் திருநங்கைகள் தாலி கட்டி கொள்ளும் ஐதீக நிகழ்வு நடைபெற்றது.
கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் நகரில் அமைந்துள்ள பழமலைநாதர் உடனுரை விருத்தாம்பிகை திருகோயில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாக இருக்கிறது. காசியை விட வீசம் அதிகமாக போற்றப்படும் தலமாகவும் தல புராணம் குறிப்பிடுகிறது.
இந்நகரில் சாத்துகூடல் ரோட்டில் வீற்றிருக்கும் திரவுதி அம்மன் தீமிதி திருவிழாவின் காப்பு கட்டும் நிகழ்வு கடந்த மாதம் 10 ந் தேதி தொடங்கி நடைப்பெற்று வருகிறது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் சுவாமி வீதி உலாவும் வெகு விமர்சையாக நடந்து வருகிறது.

இந்நிலையில், நேற்று அரவான் களபலி நிகழ்ச்சி நடைப்பெற்றது. அப்போது அரவான் உற்வசம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அப்போது அரவானிகள் தாலி கட்டி கொள்ளும் ஐதீகம் நடந்தது. தொடர்ச்சியாக மாலை 5 மணிக்கு அரவான் களபலி நிகழ்வு பக்தர்கள் மத்தியில் நடந்தது. ஏராளமான பக்தர்கள் இந்நிகழ்ச்சியை கண்டு வணங்கினர்.
இத்திருவிழாவின் முக்கிய விழாவான தீமிதி திருவிழா வருகின்ற 22 ந் தேதி மாலை 4 மணியளவில் நடைபெறும். அன்று இரவு அம்மனுக்கு அலாங்காரத்துடன் காட்சி தந்து அருள் பாலிப்பார். தொடர்ந்து 24ந் தேதி தர்மர் பட்டாபிஷேகமும் 29ந் தேதி பால்குட ஊர்வலமும் இரவு திருவிளக்கு பூஜையும் நடைபெறும்.
இத்திருவிழாவின் பயனாக ஊர்மக்கள் நன்றாக இருக்க வேண்டும் மற்றும் விவசாயத்திற்கு பக்கபலமாக இருக்கும் மழை மும்மாரி பெய்து விவசாயத்தை காப்பாற்ற வேண்டும் என்பதும் ஐதீகமாக பார்க்கப்படுகிறது.