நடிகர் சிம்புவின் பத்து தல படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்தது

0
1

நடிகர் சிம்புவின் பத்துதல படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்ததை டிவிட்டரில் செல்பியுடன் பதிவிட்டுள்ளார்.

சிலம்பரசன் சிறுவயதிலேருந்தே சினிமா துறையில் இருந்து வருகின்றார். குழந்தை நட்சத்திரமாக அவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களின் மனதை கவர்ந்து வந்தது. நல்ல திறைமையான நடிப்பின் மூலம் இன்றளவும் சிறந்த முன்னணி நடிகராக திரைத்துறையில் வலம் வருகின்றார்.

இவர் நடிப்பில் வெளியான மாநாடு மற்றும் வெந்து தணிந்தது காடு திரைப்படங்கள் எதிர்பார்த்தை விடவும் சிறப்பான வெற்றியை தந்தநிலையில் தற்போது, அவர் பத்துதல என்ற படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதுமாக முடிந்துள்ளதை தன் சமூகவளை தளத்தின் மூலம் அறவித்தார்.

இந்த படத்தை கிருஷ்ணா இயக்கயுள்ளார். கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன ‘மஃப்ட்டி’ படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகியுள்ளது.

நடிகர் சிம்புவின் பத்து தல படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்தது

நிழல் உலக தாதாவை தேடிப்போகும் ரகசிய போலிஸ் பற்றிய கதையாக வெளியான மஃப்ட்டி, சிவராஜ்குமார் நடித்த படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையைப் பெற்றது. இதற்கிடையே தமிழில் உருவாகும் பத்து தல படத்தில் சிம்புவுடன் இணைந்து கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் கௌதம் மேனன் வில்லனாக நடித்துள்ளார்.

ஸ்டுடியோ கிரீன் K.E.ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் ‘பத்து தல’ படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள துங்கபத்திரை அணையில் நடந்து முடிந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக நடிகர் சிம்பு ட்வீட் செய்துள்ளார்.

இந்நிலையில், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசுடன் அடுத்த படத்தில் கமிட் ஆகவுள்ளதாகவும் சினி வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றது. தற்போது, இவர் ஓரு அனிமேஷன் படம் ஓன்றை இயக்கி வருகின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here