தூத்துக்குடி: குலசேகரபட்டினத்தில் தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார வதம் நேற்று விமர்சையாக நடைபெற்றது. விழாவினை யொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்து அம்மனுக்கு நேர்த்தி கடனை செலுத்தி வந்த வண்ணம் இருந்தனர்.
புகழ்பெற்ற மைசூர் தசரா விழாவிற்கு அடுத்தப்படியாக குலசை முத்தாரம்மன் கோவிலின் தசரா விழா பிரசித்தம் பெற்றது. கடந்த இரண்டு வருடங்களாக விமர்சையாக இந்த தசரா திருவிழா கொண்டாடப்படவில்லை. கொரோனா கட்டுப்பாடுகளால் தவிர்கக்ப்பட்டது அனைவரும் அரிந்ததே.
ஆண்டுதோறும் நடைபெறும் இந்த தசரா திருவிழாவிற்கு இந்தாண்டு பொது மக்கள் அனைவரும் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டதால் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட பக்தர்கள் மற்றும் அன்டை மாநில பக்தர்கள் என குலசேகரப்பட்டினம் முழுவதும் விழா கோலம் பூண்டது.

பக்தர்கள் தங்கள் பக்தியை வெளிப்படுத்தும் விதமாக காளி, அனுமன், அம்மன், ராஜா ராணி, பத்ரகாளி என பலவித வேடங்களில் பல்வேறு இடங்களுக்கு சென்று கையில் உண்டியல் ஏந்தி கணிக்கை பெற்று வந்தனர். இந்த காணிக்கைகளை முத்தாரம்மன் கோவில் உண்டியலில் செலுத்தி பக்தர்கள் அம்மனின் அருளை வேண்டி வழிபட்டனர்.
இதையும் படியுங்கள்: அருட்பெரும் ஜோதியான வள்ளாரின் 200வது பிறந்த நாள் இன்று
இந்த திருகோவிலில் உள்ள முத்தாரம்மனை விழபட்டால் வீடுபேறு மற்றும் சகல செல்வங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தியும், முளைபாரி எடுத்து வந்தும் வழிபட்டனர்.
இந்த கோவிலின் நவராத்திரி விழாவில் தசரா விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் நடைபெற்று வருகின்றது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்ச்சி நேற்று இரவு அலை கடலுக்கும் பக்தர்களின் மத்தியிலும் இந்த நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது.
பதினோராம் நாளான இன்று அம்மன் பூஞ்சரப்பரத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். மாலை 4 மணிக்கு கொடி இறக்கப்பட்டு காப்பு களைதல் நடைபெறும் வேடமணிந்து வந்த பக்தர்களும் காப்புகளை களைவார்கள். நள்ளிரவு 12 மணிக்கு மீண்டும் அபிஷேகம் நடைபெறும். வெள்ளிக்கிழமை காலை சிறப்பு பாலபிஷேகத்துடன் குலசை தசரா திருவிழா நிறைவடைகிறது.
இது போன்ற பல்வேறு தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.