ஜி.வி.பிரகாஷ், கௌதம் வாசுதேவ மேனன் இணையும் 13 என்ற படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகின்றது.
G.V.பிரகாஷ் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது பல படங்களில் நடித்தும் வருகின்றார். இவர் சிறந்த கதை அம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து அதில் வெற்றி கண்டும் வருகின்றார். இவரின் நடிப்பில் வெளியான டார்லிங் படம் அனைவரையும் கவர்ந்தது. அதன்பின் தொடர்ந்து இசையிலும் நடிப்பிலும் கவனம் செய்து வருகின்றார்.
சமீபத்தில் சூரரைப் போற்று படத்தின் இசையமைப்புக்காக தேசிய விருது இவருக்கு இந்திய குடியரசு தலைவரின் கையால் வழங்கப்பட்டது. மேலும், இந்த படம் 5 வித விருதுகளை தட்டி சென்றது குறிப்பிடத்தக்கது.
அதைபோலவே, இயக்குனராக களம் கண்ட கௌதம் மேனன் தற்போது நடிகராக பல படங்களில் நடித்து ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறார். இந்நிலையில், ஜி.வி.பிரகாஷ், மேனன் இருவரும் நடித்த செல்ஃபி திரைப்படம் அனைவரையும் ஈர்த்தது இவர்களுக்கு வெற்றி படமாகவும் அமைந்திருந்தது.

இதனை தொடர்ந்து இருவரும் இணைந்து நடிக்கும் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு 13 என்று தற்போது பெயரிடப்பட்டுள்ளது. இந்த படம் மெகா த்ரில்லர் நிறைந்த படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
’13’ திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் யூடியூபர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இயக்குனர் கவுதம் மேனன் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார். சி.எம். மூவேந்தர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜே.எப் காஸ்ட்ரோ படத்தொகுப்பு செய்கிறார். இந்த திரைப்படத்தை விவேக் என்ற புதுமுக இயக்குனர் இயக்கியுள்ளார். நந்தகோபால் தயாரித்து உள்ளார். இதற்கான அனைத்து வேலைகளும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராகிறது.