தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்‘ திரைப்படம் ஆக்ஸ்ட் 18 ரீலிஸ் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. நடிகர் தனுஷ் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் சிறப்பாக தன் நடிப்பு திறமையை கொண்டு அந்த கேர்க்ட்ராகவே மாறி விடுவார்.
அவர் கோலிவுட்டில் சிறப்பாக செயல்படுகிறார் அதுபோலவே ஹாலிவுட் திரைப்படத்திலும் நடித்துள்ளார். பல விருதுகளையும் பெற்றுள்ளார். அவர் நடிப்பில் உருவான ஜெகமே தந்திரம், மாறன் படங்கள் சிறப்பாக அமையவில்லை எனவே அவ்விடத்தை நிரப்ப நல்ல கதை அம்சம் நிறைந்த படத்தை எதிர்பார்த்தார்.

திருச்சிற்றம்பலம் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் ப்ரியா பவானி ஷங்கர், நித்யா மேனன், ராஷி கண்ணா உள்ளிட்டோர் தனுஷுடன் நடித்துள்ளனர். மேலும் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். படப்பிடிப்பு நிறைவுபெற்று தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் சூழலில் படம் குறித்த அப்டேட் வெளியாகாமல் இருந்தது.
இதற்கிடையே விரைவில் படத்தின் கேரக்டர் போஸ்டர்கள் வெளியிடப்படுமென அறிவிக்கப்பட்டது. அதன்படி பிரியா பாவனி சங்கர், ரஞ்சனி கதாபாத்திரத்திலும், ராஷி கண்ணா அனுஷா கதாபாத்திரத்திலும், நித்யா மேனன் ஷோபனா கதாபாத்திரத்திலும் நடித்திருப்பதாக அறிவிக்கப்பட்டு அதுதொடர்பான போஸ்டர்கள் வெளியாகின.
தனுஷ் இத்திரைப்படத்தில் டெலிவிரி பாயாக நடித்திருக்கிறார். இந்த படம் தனுஷிற்கு மெகா ஹிட் தரும் என ரசிகர்கள் எதிர்ப்பார்கின்றனர். அனிருத் தற்போது இசையில் கலக்கி வருவதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்த்து ஏற்பட்டுள்ளது. சன்பிக்சர்ஸ் இப்படம் ஆகஸ்ட் 18 ஆம் தேதி வெளியிடுவதாக தெரிவித்துள்ளது.