திருவண்ணாமலை: முக்தி தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன் முக்கிய நிகழ்வுகளில் ஓன்றான தேர் பவனியும் நான்கு மாட வீதிகளிலும் வந்து பக்தர்களுக்கு அருள் வழங்கினார் அண்ணாமலையார். இன்று கார்த்திகை தீப திருநாளினை முன்னிட்டு அதிகாலை 3.00 மணிக்கு மேல் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
அடிமுடி அறியா அண்ணாமலையாக விளங்கும் திருஅண்ணாமலையாரை காண தினமும் திரளான பக்தர்கள் வருவார்கள் வெளிநாடுகளிலிருந்தும் வந்து தரிசனம் செய்து வருகின்றார்கள். ஓவ்வொரு பௌர்ணமி அன்றும் பக்தர்கள் கிரிவலம் 14 கி.மீ தூரம் அண்ணாமலையாக காட்சி அளிக்கும் மலையை நடந்தே வலம் வந்து இறுதியாக அண்ணாமலையாரை தரிசனம் செய்வார்கள்.
இன்று 10ம் நாளில் அண்ணாமலையார் சன்னதியில் ஏகன் அனேகனாக மாறும் தத்துவத்தை போற்றும் விதமாக கருவறையிலிருந்து கொண்டு வரப்பட்ட ஐந்து மடக்குகளில் ஏற்றப்பட்ட தீபத்தை கொண்டு பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதனை காண ஏராளமான பக்தர்கள் வந்து அண்ணாமலையாருக்கு அரோகரா என்று முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.

இன்று மாலை 6 மணிக்கு அண்ணாமலையார் கோவிலின் பின்புறமாக சிவலிங்கமாக காட்சி தரும் 2668 அடி உயர மலையில் மகா தீபம் ஏற்றப்படும் இதனை காண பலலட்சம் மக்கள் கூடி இருப்பார்கள் தீபம் ஏற்றப்பட்டப் பிறகு மலையை சுற்றி பக்தர்கள் அனைவரும் வலம் வந்து தரிசனம் செய்து வழிபடுவர்.
இந்நிலையில், தீபம் ஏற்றப்படும் மலைப்பகுதியில் ஏறுவதற்கு பக்தர்கள் சிறப்பு அனுமதி பெற வேண்டும் என்பதால் அதற்காக மக்கள் வரிசையில் நிற்கத் தொடங்கியுள்ளனர். இதனால் அங்கு கட்டுக்கடங்காத கூட்டம் ஏற்பட்டுள்ளது. மலை ஏறுவதற்கு அனுமதி சீட்டு பெற ஆதார் கார்டு அல்லது வாக்காளர் அட்டை இதில் ஏதாவது ஒன்றை வைத்து புகைப்படத்துடன் கூடிய அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது. முதலில் வரும் 2500 பேருக்கு மட்டுமே மலையில் ஏற அனுமதி வழங்கப்படுகிறது.
இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.