எனது பிரின்ஸ் திரைப்படம் தீபாவளி அன்று ரீலிசாவது இதுவே முதன் முறை எனக் கூறி சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி.
பிரின்ஸ் திரைப்படம் தீபாவளி அன்று ரீலிஸ் ஆவது இதுவே முதன் முறை என்றும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அனைத்து ஹூரோக்களின் படங்களையும் தீபாவளி ரீலிஸாக பார்த்திருக்கிறேன். இப்போது, தீபாவளி அன்று தியேட்டருக்கு போனால், என்னுடைய படமும் இருக்கும் என நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது என நெழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.
இதையும் படியுங்கள்: AK 62க்கு பிறகு ஓன்றரை வருடம் இடைவெளி எடுக்க நடிகர் அஜித் முடிவு
பிரின்ஸ் திரைப்படம் வருகின்ற தீபாவளி அன்று திரையரங்குகளில் ரீலிஸ் ஆகின்றது. இப்படத்தை தெலுங்கு படங்களின் இயக்குனர் அனுதீப் இயக்கியுள்ளார். படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சிவகார்த்திகேயன்,’ ‘பிரின்ஸ் மிகவும் சிம்பிளான கதை. இந்தியன் பையன், பிரிட்டிஷ் பெண்ணை காதலிக்கிறான் என்பதுதான் கதை. ஆனால், இதில் இயக்குநர் அனுதீப் கொடுத்திருக்கும் காமெடிக்கான ட்ரீட்மென்ட் தான் படத்தில் புதிய விஷயம். காமெடி என்றால் கவுன்டர் செய்யாமல் சம்பந்தமேயில்லாத வேறொரு பதில் சொல்வது சில்லியான பதில் சொல்வது என புதிய விஷயம் சொல்லியிருக்கிறோம்.

முதல் முறையாக தீபாவளி அன்று என் படம் வெளியாவது இந்த ஆண்டின் ஸ்பெஷல் எனக்கு என்று கூறினார். மேலும், இப்படத்தில் ப்ரேம்ஜி அமரன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சிவா சத்யராஜ் கூட்டணியில் வெளியான வறுத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மிகப் பெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்படமும் 100 கோடி வசூல் வேட்டையில் இறங்கியது குறிப்பிடத்தக்கது. எஸ் கேவின் ரசிகர்கள் இந்த படத்தின் ரீலிசை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 21ம் தேதி ரீலிசாகும் இதே நாளில் கார்த்தி நடிப்பில் வெளியாகும் சர்தார் படமும் காத்துக் கொண்டுள்ளது.