மதுரையில் டைட்டில் பார்க் தொடங்கப்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

0
24

மதுரையில் சென்னை, கோவைக்கு அடுத்தப்படியாக ஐ.டி பூங்கா தொடங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு.

மதுரை மாநகரம் பழமை வாய்ந்த பல சிறப்புகளை கொண்ட நகரமாக இருந்து வருகிறது. தமிழகத்தின் கலாச்சாரத்தின் தலைநகராகவும் பண்பாட்டின் கரூவூலமாகவும் நகரங்களில் மதுரை மாநகரமும் ஓன்று. தூங்கா நகரமாகவும் கோயில்கள் நிறைந்த ஊராகவும் மதுரை இருந்து வருகிறது.

அடிப்படை வசதிகள் மற்றும் போக்குவரத்து சார்ந்து பல திட்டங்கள் அமல்படுத்தப்பட்ட நிலையிலும் தொழில் வளர்ச்சி சார்ந்த திட்டங்கள் மதுரை மக்களுக்கும், இளைஞர்களும் எட்டாகணியாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில், நாட்டில் எளிமையாக தொழில் புரியும் பட்டியலில் தமிழம் 14வது இடத்திலிருந்து தற்போது 3வது இடத்திற்கு முன்னேறி உள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் மதுரையில் மாட்டுத்தாவணி அருகே 500 ஏக்கர் நிலத்தில் ரூபாய் 600 கோடியில் டைட்டில் பார்க் ஓன்று நிறுவப்படும். இந்த திட்டத்தின் மூலம் 10,000 பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்று தமிழக முதல்வர் கூறியுள்ளார்.

மதுரையில் டைட்டில் பார்க் தொடங்கப்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மதுரையில் இன்று சிறு,குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான தெற்கு மண்டல மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். இந்த மாநாட்டில் அவர் பேசியது: ” சிறு,குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை தமிழக அரசு முக்கியமானதாக கருதுகிறது. மதுரை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட சுமார் 50 ஆயிரம், சிறு,குறு நடுத்தர தொழில்கள் இயங்கி வருகிறது. இந்நிறுவனங்களின் மூலம் 3 லட்சத்து 37 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது.

இதையும் படியுங்கள்: மதுரை வண்டியூர் கண்மாயில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க முடிவு

தமிழ்நாட்டின் தனித்தன்மைப் பெற்ற பொருட்கள் ஏராளமாக இருக்கின்றன. புவிசார் குறியீடு பெற்ற 42 பொருட்களில் 18 பொருட்கள் தென் தமிழகத்தைச் சேர்ந்தவை. புவிசார் குறியீடு பெறுவதற்காக விண்ணப்பித்துள்ள 25 பொருட்களில் கம்பம் பன்னீர் திராட்சை, உடன்குடி பனங்கற்கண்டு, தூத்துக்குடி மக்ரூன், சோழவந்தான் வெற்றிலை, மார்த்தாண்டம் தேன் உள்ளிட்ட பல 14 பொருட்கள் தென் தமிழகத்தைச் சேர்ந்தவை என்பது பெருமைக்குரிய ஒன்று.

இப்பொருட்களுக்கு மிகப்பெரிய அளவில் வெளிநாடுகளில் வரவேற்பு உள்ளது என்ற காரணத்தால், நமது உற்பத்தியாளர்களும், ஏற்றுமதியாளர்களும் அதிகளவில் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து தமிழகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here