திருச்செந்தூர் சுப்ரமணியனியரின் ஆவணி திருவிழா நேற்று கொடியேற்றதுடன் வெகு விமர்சையாக தொடங்கியது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தாக்கத்தின் காரணமாக விழாவிற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதனால் எளிமையான முறையில் இரண்டு வருடங்களும் விழா கோவில் பக்தர்களின்றி நடைபெற்றது.
இந்நிலையில், கொரோனா தாக்கத்திலிருந்து மீண்டு வந்ததன் காரணமாக இந்த ஆண்டு நடைபெறும் ஆவணி திருவிழாவிற்கு பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் கடவுளாக போற்றப்படும் முருகப் பெருமானின் அறுபடைகளில் இரண்டாவதாக இருக்கும் திருசீர்ஆலவாய் எனப்படும் திருச்செந்தூர் சுப்ரமணியரின் ஆவணி திருவிழா நேற்று காலை கொடியேற்றம் வெகு சிறப்பான முறையில் பக்தர்களின் ஆராவாரத்தில் நடைபெற்றது.

12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில், வரும் 21ம் தேதி இரவு 7.30 மணிக்கு சிவன்கோயிலில் குடவருவாயில் தீபாராதனை நடைபெறுகிறது. 23ம் தேதி 7ம் திருவிழா அன்று, காலை 5.30 மணிக்குள் சுவாமி சண்முகர் உருகு சட்டசேவையும், 8.45 மணிக்கு சண்முகவிலாசத்தில் இருந்து சுவாமி வெற்றிவேர் சப்பரத்திலும், மாலை 4.30 மணிக்கு சிவப்பு சாத்தி வீதியுலா வருகிறது. 8ம் திருவிழாவான 24ம் தேதி காலை 5 மணிக்கு சுவாமி வெள்ளி சப்பரத்திலும், காலை 11 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை சாத்தியில் எழுந்தருளுகிறார்.
ஆவணி திருவிழாவின் முக்கிய வைபவமான தேரோட்டம் வருகின்ற 26ம் தேதி நடைபெறும். 28ம் தேதி 12 ம் திருவிழாவுடன் நிறைவு பெறுகிறது. திருவிழா காலங்களில் தினமும் மாலை நேரங்களில் சுவாமியும் அம்பாளும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெறும். அது சமயம் பக்த மெய் அன்பர்கள் சுப்ரமணியரின் அருளை பெற வேண்டுகிறோம்.