திருப்பதியில் வரலாறு காணாத அளவில் ஓரே நாளில் 6.18 கோடி உண்டியல் காணிக்கையை பக்தர்கள் செலுத்தியுள்ளனர்.
திருப்பதி சென்று வந்தால் வாழ்வில் திருப்பம் ஏற்படும் எனக்கூறுவது உண்டு. இதன் பின்னணியில் திருப்பதி ஏழுமழையான் கோவிலை தான் வைத்து கூறுகின்றனர். மேலும் பணக்கார கடவுளாக திருப்பதி ஏழுமலையான் அழைக்கப்படுகிறார்.
உலக பிரசித்திப் பெற்ற தலங்களில் ஒன்றான திருப்பதி ஏழுமலையான் திருகோவிலும் ஓன்று. தினமும் லட்சக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் பக்தர்கள் வந்து ஏழுமலையானை தரிசனம் செய்து செல்கின்றனர்.

கொரோனா காலகட்டங்களால் பல மாதமாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது கொரோனா கட்டுக்குள் வந்திருக்கும் நிலையில் இந்தியா மட்டும் அல்லாது வெளிநாட்டு பக்தர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் நாள்தோறும் பக்தர்கள் அதிகமாக வந்து வெங்கடாஜலபதி பெருமானை தரிசனம் செய்கின்றனர்.
இந்நிலையில், இதற்கு முன்னர் 2018 ம் ஆண்டு 6.45 கோடி ஓரே நாளில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கை செலுத்தியுள்ளனர். அதே ஆண்டே 6.28 கோடி உண்டியல் வசூலானது. பின்னர் கோவிட் 19 முடக்கத்திற்கு பிறகு முதன் முதலாக வார இறுதி நாட்கள் இல்லாமல் நேற்று திங்கள்கிழமையான வேலை நாளில் 6.18 கோடி உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளது.
இது திருப்பதி தேவஸ்தான வரலாற்றிலேயே மூன்றாவது முறையாகவும் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு முதலாவதாகவும் பார்க்கப்படுகிறது.