பான் கார்டு ஆன்லைன் மோசடியில் 1.6 லட்சம் இழந்த பெண்

0
56

பான் கார்டு (PAN Card) ஆன்லைன் மோசடி வழியாக 1,67,920 ரூபாயை இழந்துள்ளார் தமிழ்நாட்டை சார்ந்த பெண். இந்தியாவில் ஆன்லைன் மோசடிகளை பற்றி எவ்வளவு விழிப்புணர்வு விளம்பரங்கள் இருந்தாலும் அதில் ஏமாறுபவர்களும் இருக்க தான் செய்கிறார்கள்.

வங்கிகளில் இருந்தும் பல முறை நாங்கள் எந்த ஓரு அப்டேட்டுக்காவும் வங்கி கணக்கு விபரங்கள் மற்றும் எந்த ஓரு ஓடிபியையும் (ONE TIME PASSWARD) உங்களிடம் கேட்பது இல்லை என அடிக்கடி குறுஞ்செய்திகள் மூலமூம் வாயிஸ் காலாகவும் அறிவிப்பு வந்து கொண்டே தான் உள்ளது. இருந்தும் அதை மறந்து சிலர் ஏமாறுகின்றனர்.

பான் கார்டு ஆன்லைன் மோசடி

ஈரோடு மாவட்டம் பெரியார் நகரில் சுபாஷ்சந்திரபோஸ் மற்றும் அவரது மனைவி பீனா வசித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: கிண்டர் ஜாய் சாப்பிட்டால் நோய் ஏற்படும் அபாயம்!

பீனாவின் செல்போனிற்கு ஓரு குறுஞ்செய்தி (SMS) ஓன்று வந்தது. அதில் இருக்கும் லிங்க்குக்குள் சென்று பான் கார்டு அப்டேட் செய்ய உங்கள் வங்கி கணக்கு விபரங்களையும் பான் கார்டு பற்றிய விபரங்களையும் தெரிவிக்க கூறியது. இவரும் சிந்திக்காமல் கொடுத்துள்ளார். பிறகு அதில் வரும் ஓடிபி கேட்டது. அற்கும் அவர் தயங்காமல் OTP யை கொடுத்துள்ளார். சிறிது நிமிடத்தில் வங்கி கணக்கில் இருந்த முழுத் தொகையான 1,67,920 ரூபாயும் எடுக்கப்பட்டது என செல்போனில் SMS வந்தது.

அதிர்ந்து போன அப்பெண் உடனே வங்கிக்கு சென்று நடந்தவைகளை கூறி மேளாலரிடம புகார் கொடுத்தார். அவர்களும் வங்கி கணக்கை சோதனை செய்து  பார்த்தனர். அதன் பின் தான் ஏமாற்றப்பட்டேன் என்பதை அறிந்து கொண்ட அப்பெண் பீனா ஈரோட்டில் உள்ள சைபர் க்ரைம் காவல் துறையினரிடம் புகார் கொடுத்தார். அவர்களும் வழக்கு பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

பான் கார்டு ஆன்லைன் மோசடிகள் மட்டும் அல்லாது இன்னும் வேறு நிறைய வழிகளில் ஆன்லைன் மோசடிகள் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இதுபோல் மோசடிகளை நாம் எப்போதும் நம்பி ஏமாற கூடாது. விழிப்புணர்வுடன் இருப்பது தான் புத்திசாலித்தனம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here