TNPSC க்கு இதுவரை இத்தனை லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனரா?

0
6

டிஎன்பிஎஸ்ஸி (TNPSC) குரூப் 4 க்கு விண்ணப்பிக்க நேற்று ஏப் 28 இறுதி நாளாக இருந்தது அதன்படி GROUP 4 க்காக விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 21 லட்சமாக உள்ளது குறிப்பிட தக்கது.

தமிழ்நாடு அரசின் அனைத்து பணிகளுக்கும் தேர்வின் மூலமே வேலையாட்டகள் நியமிக்கப்படுகின்றனர். குரூப் 1 பிரிவிற்கு  தமிழக அரசின் உயர்ந்த மற்றும் அதிகார பணிகளுக்கான துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் பணிகளுக்கு இத்தேர்வின் மூலமே நிரப்பப்படுகிறது.

TNPSC க்கு இதுவரை இத்தனை 21 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்

குரூப் -2 பிரிவில் சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், சார் பதிவாளர், லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு உதவியாளர், புலனாய்வு பிரிவு சிறப்பு உதவியாளர், குற்றப்பிரிவு சிறப்பு உதவியாளர் ஆகிய பணிகள் இடம்பெறுகின்றன.

குரூப் 4 தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஒ), டைபிஸ்ட், ஸ்டேனோ டைபிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

இதன் அடிப்படியில் குரூப் 4 க்கான தேர்வு மார்ச் 29 ம் தேதி 7301 பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு தேர்வானைய தலைவர் பாலசந்திரன் வெளியிட்டார். மேலும் ஜூலை 24 ம் தேதி தேர்வு நடைபெறும் எனவும் தெரிவித்தார்.

இதற்கான விண்ணப்பம் இடும் நாள் ஏப்ரல் 28 ம் தேதி கடைசி நாள் என கூறி இருந்தனர். அதன்படி நேற்று வரையில் மொத்தம் 21 லட்சம் பேர் குரூப் 4 க்கு விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. சராசரியாக ஓரு பணியிடத்திற்கு 300 பேர் போட்டியிடுவதாக தெரிய வருகிறது. எதிலும் உறுதியும் கடுமையான விடா முயற்சியும் இருந்தால் வெற்றி நமதே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here