இன்று கடைப்பிடிக்கப்படுகின்றது. மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த ஓவ்வொரு ஆண்டும் அக்டோபர் 13ம் தேதி ‘National No Bra Day’ கடைப்பிடிக்கப்படுகின்றது.
உலகளவில் ஓவ்வொரு 14 வினாடிக்கும் ஓருவர் மார்பக புற்றுநோயால் பாதிக்கபடுகின்றார். இந்தியாவில் ஓவ்வொரு 4 நிமிடங்களுக்கும் ஓருவர் இந்நோயால் பாதிக்கப்படுகிறார் என்று கண்டறியப்படுகிறது என்கின்றன புள்ளி விவரங்கள்.
உலக அளவில் பல கோடி பெண்கள் இந்த மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்த மார்பக புற்றுநோயானது பெண்களுக்கு மட்டும் தான் வருமா என்றால் இல்லை ஆண்களுக்கும் வருகின்றது என்கிறது மருத்துவ ஆராய்ச்சிகள் ஆனாலும் மிக அதிகளவில் பெண்களையே பாதிக்கிறது.
முன் காலத்தில் 40 வயதுக்கு மேற்பட்டவர்களை பாதித்து வந்த இந்த மார்பக புற்றுநோயானது தற்போது, இளம் பெண்களையும் பாதிக்கிறது. உலக சுகாதார அமைப்பின் (WHO) உலகளவில் இறப்புக்கான இரண்டாவது முக்கிய காரணமாக புற்றுநோய் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

நுரையீரல், புரோஸ்டேட், பெருங்குடல், வயிறு மற்றும் கல்லீரல் புற்றுநோய் ஆகியவை ஆண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களாகவும், மார்பகம், பெருங்குடல், நுரையீரல், கர்ப்பப்பை வாய் மற்றும் தைராய்டு புற்றுநோய் ஆகியன பெண்களுக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
புற்றுநோய்யிலிருந்து பாதுகாத்துக் கொள்ள நமது வாழ்க்கையில் பின்பற்றும் ஆன்றாட செயல்களிலிருந்தே பாதுகாக்கலாம் என்கின்றது மருத்துவ ஆய்வுகள். நாம் அன்றாடம் எடுத்து கொள்ளும் உணவு வழியாக அதனை கட்டுப்படுத்தவும் முடியும் வராமல் தடுக்கவும் முடியும் மேலும், பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவது பற்றிய விழிப்புணர்வு மிக முக்கியமாக இருக்கின்றது.
உலக சுகாதார அமைப்பின் புற்றுநோய்க்கான ஆராய்ச்சிக்கான சர்வதேச நிறுவனம் (IARC) 2007ம் ஆண்டு வெளியிட்ட அறிவிப்பில், சர்க்காடியன் இடையூறுகளை உள்ளடக்கிய ஷிப்ட் முறை, தூக்க முறைகளில் மாற்றம் இருக்கும் மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
பெண்களுக்கு மார்பகங்களில் ஏற்படும் எவ்வித அசோகரியங்களையும் அவரவர் விரும்பும் மருத்துவரை அணுகி ஆலோசனைகளை உடனுக்குடன் தெரிந்து கொள்வது அவசியம். பெண்கள் மார்பக புற்றுநோய் பற்றிய முழு விழிப்புணர்வையும் பெற்று இருந்தால் எவ்வித நோயையும் எதிர்நோக்கி உறுதியுடன் வாழலாம்.
பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவே ஓவ்வொரு ஆண்டும் அக் 13ம் தேதியை நேஷனல் நோ பிரா டே கடைப்பிடிக்கப்படுகின்றது.