விக்ரம் வேதா இந்தி ரீமெக் படத்தின் டீரைலர் வெளியானது

0
4

விக்ரம் வேதா இந்தி ரீமெக் படத்தின் டீரைலர் வெளியானது. தமிழில் வெளியான விக்ரம் வேதா படத்தை இந்தியில் ரீமெக் செய்து அதனை படமாக்கி டீசரும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் 2017ம் ஆண்டு வெளியான விக்ரம் வேதா, கோலிவுட் ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றது. ஆக்சன் த்ரில்லர் ஜானரில் உருவாகியிருந்த இந்தப் படத்தில், விஜய் சேதுபதி, மாதவன் இருவரின் நடிப்பும் ரசிகர்களை சிலிர்க்க வைத்தது. இந்தப் படத்தை புஷ்கர் காயத்ரி தம்பதியினர் இயக்கியிருந்தனர். விக்ரம் வேதா படத்தின் வெற்றியில் பெரும்பங்கு திரைக்கதை தான் என விமர்சகர்கள் கூறினர்.

விக்ரம் வேதாவுக்கு தமிழில் கிடைத்த சிறப்பான வரவேற்பைத் தொடர்ந்து, இந்தியிலும் ரீமேக் செய்யப்படுவதாக புஷ்கர் காயத்ரி அறிவித்தனர். இதனையடுத்து ஹிருத்திக் ரோஷன், சயிப் அலிகான் நடிப்பில் இந்தி ரீமேக் வெர்ஷன் தொடங்கப்பட்டது.

விக்ரம் வேதா இந்தி ரீமெக் படத்தின் டீரைலர் வெளியானது

விஜய் சேதுபதி கேரக்டரில் ஹிருத்திக் ரோஷனும், மாதவன் ரோலில் சயிப் அலிகானும் நடித்துள்ளனர். இந்தப் படம் செப்டம்ப்ர 30ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

கடந்த வாரங்களில் விக்ரம் வேதாவின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பையும் 1 மில்லியன் பார்வையாளர்களையும் கடந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியிலும் இப்படம் செமையாக ரீச்சாகும் என பட ஆர்வளர்கள் கருதுகின்றனர். இந்தியில் சமீபகாலமாக பெரிய அளவில் திரைப்படங்கள் கூட சூப்பர் ஹிட் அடிக்கவில்லை. அதனால் தென்னிந்திய இயக்குனர்களுக்கு அங்கு மவுசு அதிகரிப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி பெரும் ஆராவாரத்தை பெற்று வருகிறது. இது பெரிய அளவில் சூப்பர் ஹிட் கொடுக்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை.

இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here