மாமன்னன் படப்பிடிப்பு பகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்த உதயநிதி

0
6

மாமன்னன் படப்பிடிப்பு பெரும் பகுதி சேலம் அருகேயுள்ள ஜருகுமலைப் பகுதியில் காட்சியாக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அப்பகுதி மலைவாழ் மக்களின் தேவைகளை செய்தார் உதயநிதி ஸ்டாலின்.

இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் மாமன்னன் இப்படத்தில் கதாநாயகனாக உதயநிதி நடித்துள்ளார். மேலும், அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். வைகைப்புயல் வடிவேலு மற்றும் பஹத் பாசில் நடித்துள்ளனர். இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பும் முடிந்துள்ளதை அடுத்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர்.

இதையும் கவனியுங்கள்: இந்தி ஓற்றுமை என்னும் கயிற்றால் நாட்டை இணைக்கிறது-அமித்ஷா

‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான உதயநிதி, அடுத்தடுத்து சில ஜாலியான கமர்சியல் படங்களில் நடித்திருந்தார். சீனு ராமசாமி இயக்கத்தில் அவர் நடித்த ‘கண்ணே கலைமானே’ திரைப்படம், உதயநிதியின் நடிப்புக்கு நல்ல விமர்சனங்களை பெற்றுக் கொடுத்தது. கடந்த சில வருடங்களாக அரசியலிலும் தீவிரமாக செயலாற்றி வரும் உதயநிதி, கடைசியாக நெஞ்சுக்கு நீதி படத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அவர் முதன்முறையாக மாரி செல்வராஜ் இயக்கும் ‘மாமன்னன்’ படத்தில் இணைந்துள்ளார்.

மாமன்னன் படப்பிடிப்பு பகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்த உதயநிதி

பரியேறும் பெருமாள் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கி பெரும் வெற்றியும் கண்டார். அதனை தொடர்ந்து உதயநிதியை வைத்து இப்படத்தை இயக்கியுள்ள நிலையில் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். படத்தின் படக்காட்சிகள் சென்னை மற்றும் சேலம் சுற்றுவட்டாரத்தில் எடுக்கப்பட்டது. அதிலும் சேலத்தில் ஜருகு மலைப் பகுதியில் பெரும் பகுதி படமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதனால், சேலம் ஜருகுமலை பகுதி மேம்பாட்டிற்கு எனது பெயரிலான அறக்கட்டளை வாயிலாக, அரசு பள்ளி கட்டிடத்தை புதுப்பிக்க ரூ.13.60 லட்சத்திற்கான காசோலையையும், மலைப்பாதையில் அமைக்கப்படவுள்ள 10 Convex Mirror-யையும் அதிகாரிகளிடம் வழங்கினோம் என்பதை உதயநிதி தன் டிவிட்டர் கணக்கில் பதிவு செய்துள்ளார்.

இப்படம் பெரும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இப்படம் குறித்து பல தகவல்கள் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இது போன்ற பல தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here