பேசும் படத்தின் 35 வது ஆண்டை கொண்டாடிய உலகநாயகன்

0
17

பேசும் படத்தின் 35 வது ஆண்டை கொண்டாடிய உலகநாயகன் பேசும் படம் திரைப்படம் 1987ம் ஆண்டு நவம்பர் 27ல் வெளியானது. தற்போது 35 வருடங்கள் ஆகியதை டிவிட்டர் மூலம் கொண்டாடிய கமல். அப்போது அப்படத்தின் இயக்குனர் சங்கீதம் சீனிவாசராவை நினைவு கூர்ந்தார்.

தென்னிந்திய சினிமா துறையில் முன்னணி நடிகராக வலம் வருபவர் உலக நாயகனாக ரசிகர்களால் போற்றக்கூடியவர். பல வெற்றி படங்களை இந்திய திரைத்துறைக்கு வழங்கியவர். அரசியலிலும் ஈடுப்பட்டு மக்கள் நீதி மையம் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருபவர். தற்போது, விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்களில் நடித்து தனது ரசிகர்களுக்கு விருந்து அளிக்க காத்திருப்பவர்.

இந்திய அளவில் பேசும் படம் ஓன்றில் நடித்து வெற்றி கண்டவர் அப்போதே பான் இந்தியா படமாக வெளியிடப்பட்ட படத்தில் நடித்து இந்திய அளவில் உலக நாயகனாக மிளிர்ந்தவர்.

பேசும் படத்தின் 35 வது ஆண்டை கொண்டாடிய உலகநாயகன்

இப்படத்தின் இயக்குனர் சங்கீதம் சீனிவாசராவ் இவர் தென்னிந்திய திரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என பன்முக தன்மையை பெற்றவர். இவர் தமிழில் திக்கற்ற பார்வதி படத்தின் மூலம் அறிமுகமாகினார். தொடர்ந்து இரு நிலவுகள், ராஜ பார்வை, பேசும் படம், அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காம ராஜன், மகளிர் மட்டும், சின்ன வாத்தியார், காதலா காதலா, லிட்டில் ஜான், மும்பை எக்பிரஸ் போன்ற பல தமிழ் படங்களை இயக்கியவர்.

இவர் இயக்கிய பல படங்கள் மாபெரும் வெற்றி படங்களாக அமைந்தது. அவ்வரிசையில் 1987ம் ஆண்டு வெளியாகிய பேசும் படம் வெளியாகி இன்றுடன் 35 வருடங்கள் ஆகியதை கமல் டிவிட்டர் மூலம் கொண்டாடியுள்ளார். இப்படத்தில் அமலா அக்கினேனி, சமீர் காக்கர், டினு ஆனந்த், பிரதாப் போத்தன் மற்றும் கே.எஸ்.ரமேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

எந்த உரையாடலும் இல்லாத இப்படம், கன்னடத்தில் அற்புதமான பொழுதுபோக்குகளை வழங்கும் சிறந்த பிரபலமான திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றது. புஷ்பக் (இந்தி) கர்நாடகாவில் புஷ்பக விமானம், ஆந்திராவில் புஷ்பக விமானம், தமிழ்நாட்டில் பேசும் படம் மற்றும் கேரளாவில் புஷ்பக் விமானம் என வெளியிடப்பட்டது.

இது பற்றி டிவிட்டரில் குறிப்பிட்டுள்ள கமலஹாசன்,

இவ்வாறு டிவிட்டர் மூலம் இப்படத்தின் கொண்டாடட்டத்தை சமூக இணையதளத்தில் பகிர்ந்து கொண்டார்.

இதையும் படியுங்கள்: பிக்பாஸ் சீசன் 6: இந்த வாரம் எலிமினேஷன் லிஸ்ட்

இது போன்ற பலவித தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here