வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது

0
124

லிட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருந்த STR ஆக மாறிய சிம்பு நடிப்பில் உருவாகிக் கொண்டு இருக்கும் ‘வெந்து தணிந்தது காடு‘ படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்ததாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கதையை மையாமாக கொண்டு எடுக்கப்படும் படம் தான் வெந்து தணிந்தது காடு. இப்படத்தை கௌதம் வாசு தேவ மேனன் இயக்கியுள்ளார். வேறயென்ன சொல்லவா வேணும் அவர்களின் கூட்டனி என்றாலே முதலில் நமக்கு ஞாபகம் வருவது விண்னைத் தாண்டி வருவாயா படம் தான் அந்த படம் சூப்பர் டூப்பர் ஹூட்டாக அமைந்தது.

அதுபோலவே இப்படமும் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் புயலாய் வீசப் போகிறது. வேல்ஸ் நிறுவனம் தாயாரித்துள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிட தக்கது. மேலும் இத்திரைப்படம் சிம்பு  ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்தார். கடந்த ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படம் அவரது கம்பேக் படமாகவே பார்க்கப்படுகிறது.

இப்படத்திற்கு பின் சிம்பு வெந்து தணிந்தது காடு மற்றும் கௌதம் கார்த்திக் உடன் பத்து தல என்ற படத்திலும் மிக விருவிருப்பாக நடித்துக் கொண்டு இருந்தார் என்பது நாம் அறிந்ததே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here