விஜய் சேதுபதி நடித்த யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தின் ரிலீஸ் அறிவிப்பு. நீண்ட இடைவெளிக்கு பின் வெளியாகும் விஜய் சேதுபதி நடித்த இப்படம் டிசம்பர் மாதம் வெளியிடுவதாக அறிவிப்பு.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து அதிக படங்களில் நடித்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி இவர் கதாநாயகனாகவும் வில்லன் கதாப்பாத்திரத்திலும் சிறப்பான தோற்றத்தில் மிரட்டி நடித்து வருகிறார். இவர் நடித்த மாமனிதன் திரைப்படம் பல விருதுகளை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இறுதியாக விக்ரம் படத்தில் நடித்து அனைவராலும் பேசப்பட்டவராக சிறப்பான தன் திறமையை காட்டி வந்தார். தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். பல படங்கள் ரிலீஸ் தேதிக்காக காத்திருக்கின்றன. அதில் ஓரு படம் தான் யாதும் ஊரே யாவரும் கேளீர் திரைப்படம்.

இப்படத்தை மறைந்த இயக்குநர் எஸ்.பி. ஜனநாதனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய வெங்கட கிருஷ்ணா ரோகாந்த் என்பவர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து இறுதி கட்டப் பணிகளும் நிறைவடையும் நிலையில் உள்ளன. இருந்தாலும் இந்த திரைப்படத்திற்கு சில சிக்கல்கள் ஏற்பட்டன. தற்போது அவை அனைத்தையும் கடந்து யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.
குறிப்பாக டிசம்பர் மாதம் படத்தை வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளனர். இத்துடன் புதிய போஸ்டர் ஓன்றையும் படக்குழு வெளியீட்டுள்ளது. இந்த திரைப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். மேகா ஆகாஷ் நாயகியாக நடித்துள்ளார். மேலும், மோகன் ராஜா, மகிழ்ந்திருமேனி ஆகியவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.