டி20 போட்டிகளில் புதிய சாதனையை நிகழ்த்தினார் விராட் கோலி இன்று நடைபெற்ற இங்கிலாந்து உடனான போட்டியில் கோலி அரைசதம் கடந்தார் இந்த நிலையில் டி20 போட்டிகளில் 4000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற புதிய சாதனையை படைத்தார்.
இந்தாண்டு டி20 போட்டிகள் அனைத்தும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்றது. சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. அதில் முதலாவதாக நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் பாகிஸ்தான் அணி வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டியில் பாகிஸ்தானை எதிர் கொள்ளும் என்ற நிலையில் இருந்தது. இந்த நிலையில் இன்று இந்தியா இங்கிலாந்துடனான போட்டிகள் மெல்பேனில் நடைபெற்றது. இதில் முதலாவதாக டாஸை வென்ற இங்கிலாந்து பவுலிங்கை தேர்வு செய்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக ரோஹூத் 27 ரன்களுடனும் விராட் கோலி 50 ரன்களும், ஹர்த்திக் பாண்டியா 63 ரன்களையும் குவித்திருந்தனர். 20 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
இந்த போட்டியில் இந்திய அணியின் விராட் கோலி புதிய சாதனை ஓன்றை நிகழ்த்தினார். இவரின் அரைசதத்தால் டி20 போட்டிகளில் 4000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். இரண்டாவது இடத்தில் இந்திய அணியின் கேப்டன் உள்ளார். மூன்றாவதாக நியூசிலாந்து அணி வீரர் குப்தில் இருக்கிறார். அதற்கு அடுத்ததாக பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் உள்ளார்.
இந்த டி20 உலக கோப்பை தொடரில் 4 அரைசதம் கடந்து டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 4000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தி தன் மீதான பல ஏலன பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இது போன்ற பல தகவல்களையும் அறிய தலதமிழ் இணையதளத்தை படியுங்கள்.