VTK திரைபப்டத்தின் வெற்றிக்கு படக்குழுவினருக்கு பரிசளித்த ஐசரி கணேஷ்

0
2

VTK வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிலம்பரசன், இயக்குனர் மேனன், விமர்சனத்திற்கு கூல் சுரேஷ் ஆகியோருக்கு தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பரிசு அளித்து வருகின்றார்.

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் கதாநாயகனாக சிலம்பரசன் நடித்திருந்தார். இப்படத்திற்காக இவர் நிறைய மெனக்கடள்களை செய்து இருந்தார். இப்படத்தை கௌதம் வாசுதேவ மேனன் இயக்கி இருந்தார். வேல்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் ஐசரி கணேஷ் இப்படத்தை தயாரித்திருந்தார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக சித்தி இத்னானி என்பவர் நடித்திருந்தார். படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். இதன் பாடல்கள் அனைத்தும் படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டின.

இந்த படம் 15ம் தேதி ரீலிஸ் ஆகி திரையரங்குகளில் ஓடி கொண்டு உள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்ததை விட படம் சுமார் தான் என்ற கலவையான விமர்சனங்கள் வந்தாலும் படக்குழுவினர் இப்படத்தின் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

VTK திரைபப்டத்தின் வெற்றிக்கு படக்குழுவினருக்கு பரிசளித்த ஐசரி கணேஷ்

மேலும், இப்படத்தின் 2ம் பாகத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சில நாட்கள் முன்பு, நடிகர் சிம்புவுக்கு ‘டொயோட்டா வெல்ஃபையர்’ சொகுசு கார் ஒன்றை பரிசளித்தார். அதோடு இயக்குனர் கவுதம் மேனனுக்கு ‘ராயல் என்ஃபீல்ட்’ பைக்கையும் வழங்கினார்.

கேங்ஸ்ட்டர் கதைக்களத்தை கொண்டுள்ளது இந்தப் படம். முத்து என்ற கதாபாத்திரத்தில் சிலம்பரசன் நடித்துள்ளார். இருந்தாலும் படத்தில் நடித்தவர்களை காட்டிலும் நடிகர் கூல் சுரேஷ் இந்தப் படத்திற்கு செல்லும் இடமெல்லாம் புரொமோஷன் செய்து வந்தார். “வெந்து தணிந்தது காடு… எஸ்டிஆருக்கு வணக்கத்த போடு” என தொடங்கி அதை வெவ்வேறு விதமாக சொல்லி வந்தார்.

இந்நிலையில் தற்போது நடிகர் கூல் சுரேஷுக்கு ஐபோன் ஒன்றை பரிசளித்துள்ளார் ஐசரி கணேஷ். போகும் இடமெல்லாம் வெந்து தணிந்தது காடு படத்தை புரொமோட் செய்த சுரேஷுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவருக்கு இந்த பரிசு வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here