தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த விராட் கோலி

0
7

தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த விராட் கோலி பல சாதனைகளையும் படைத்து தன் மனதில் உள்ளவற்றை வெளிப்படையாக பேசியனார்.

விராட் கோலி இந்திய கிரிக்கெட் அணிக்காக ஆக்ரோஷமாகவும் பல சாதனைகளையும்  நிகழ்த்தி வருபவர். இவரது விளையாட்டில் இந்தியா பற்றிய உணர்வு வெளிப்படும். துள்ளலான விளையாட்டை தன் திறைமையால் விளையாடி இந்திய அணியின் முக்கிய நட்சத்திரமாக ஜொலித்து வருபவர் என்றால் மிகையாகாது.

கடந்த பல போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்ற குற்றச்சாட்டுடன் பல இன்னல்களையும் மனரீதியான பல துயரங்களையும் இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து கொண்டு சரியாக அணியியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லவில்லை. பல தோல்விகளை தழுவி வருகிறது என்ற பல குற்றத்திற்கு ஆளானார். அதுமட்டும் இல்லாமல் ஓரு மாத காலம் அவருக்கு அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு அளிக்கப்பட்டது. அது அவருக்கு மிகுந்த மன வேதனையை அளித்தது என்றும் கூறியிருந்தார்.

இந்த விமர்சனங்களை எல்லாம் கடந்து வந்த கோலி ஆசிய கோப்பை போட்டிகளில் பங்கு கொண்ட 3 போட்டிகளிலும் தன் வலுவான ஆட்டத்தை காட்டி 3 போட்டிகளில் இரண்டு அரைசதங்களை கடந்து டி20 களில் ரோகித் சர்மாவை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்தார்.

தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த விராட் கோலி

பாகிஸ்தானுக்கு எதிராக நேற்று துபாயில் நடைபெற்ற ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 4 சுற்றில் விராட் கோலி 44 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து இன்னொரு அரைசதத்தை தன் கணக்கில் சேர்த்தார். இந்த அரைசதம் மூலம் விராட் கோலி சிலபல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார், இதில் இந்திய தலைமைப் பயிற்சியாளர் ராகுல் திராவிட்டின் 194 சர்வதேச அரைசதங்கள் என்ற சாதனையை விராட் கோலி சமன் செய்தார்.

கோலி செய்தியாளர்களிடம் பேசும் பொழுது தோனி குறித்து பேசி நெகிழந்தார். “டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து நான் விலகிய போது தோனி மட்டுமே எனக்கு மேசேஜ் அனுப்பினார். பலரிடமும் எனது தொலைபேசி எண் உள்ளது, ஆனால் யாரும் என்னிடம் பேசவில்லை. தோனி மட்டுமே என்னிடம் பேசினார். தோனி மீது நான் கொண்டுள்ள மரியாதை மற்றும் இணைப்பு உண்மையானது. எனக்கு எதாவது தேவை என்றால் தோனியை என்னால் எப்போதும் இலகுவாக அணுக முடியும், அந்த அளவிற்கு எங்களுக்கிடையேயான நட்பு உள்ளது” என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here