Wonder Women: பெண்களின் கர்பகாலத்தை மையப்படுத்தி உருவான திரைப்படம் நேற்று 18ந் தேதி சோனி லைவில் வெளியாகி பெண்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.
மலையாள இயக்குனர் அஞ்சலி மேனன் இப்படத்தை இயக்கியுள்ளார். தனக்கே உரிய பாணியில் இப்படத்தை வடிவமைத்துள்ளார். இப்படத்தின் நேரம் 1 மணி 20 நிமிடங்கள் மட்டுமே. இந்த குறுகிய நேரத்தில் பெண்களின் கர்ப காலத்தில் அவர்கள் என்ன நினைக்கின்றார்கள் அதை கணவன் புரிந்து கொள்கிறாரா என்று பல பெண்களின் எண்ண பிரதிப்பலிப்பில் செல்கிறது.
மலையாளத்தில் பெங்களூர் டேஸ் படத்தை இயக்கி சூப்பர் ஹூட் படத்தை கொடுத்தவர். தொடர்ந்து மஞ்சாடிக்குரு, கூடே போன்ற படங்களை இயக்கி இருந்தார். இந்த படங்கள் பெரும் வெற்றியை தரவில்லை. இந்த நிலையில், ஆங்கிலத்தில் ஓன்டர் வுமன் என்ற படத்தை இயக்கி அதை நேற்று சோனி லைவ் ஓடிடி தளத்தில் ஓளிப்பரப்பினார்.

இப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நதியா, நித்யா மேனன், பார்வதி, பத்மப்ரியா, சயரோனா பிலிப் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் ’ஒண்டர் உமன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பலரது வரவேற்பையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதில், மகப்பேறு காலத்தில் பயிற்சி வகுப்பில் சந்திக்கும் கர்ப்பிணிப் பெண்களின் கதைகளைச் குறிப்படுகிறது. வெவ்வேறு பின்புலம் கொண்ட கர்ப்பிணிப் பெண்கள் இந்த வகுப்பில் பயிற்சி பெறுகிறார்கள்.
குழந்தைகளின் தன்மை, பிரசவம் எவ்வாறு நிகழும், தாய்மார்களின் உடல் நிலை போன்ற பாடங்கள் பயிற்சி வகுப்புக்கு வரும் பெண்களுக்கு நடத்தப்படுகிறது. இந்தப் பயிற்சி வகுப்பின் ஆசிரியராக நதியா நடித்திருக்கிறார். கர்ப்பிணிப் பெண்களாக நித்யா மேனன், பார்வதி, பத்மபிரியா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் கர்ப்ப காலத்தில் எவ்வாறு உடற்பயிற்சி மற்றும் மனப் பயிற்சி செய்ய வேண்டும். இக்காலக்கட்டத்தில் கணவன் மனைவியிடம் எப்படி இருக்க வேண்டும் தன் குழந்தை பற்றிய கனவை சேர்ந்து அவளுடன் பயணம் செய்ய வேண்டும். அவளுக்கு முக்கியத்துவம் அளித்தல் போன்ற செய்திகளை அழுத்தமாக கூறியுள்ளார் இயக்குனர் அஞ்சலி மேனன்.
இதையும் படியுங்கள்: விஜயின் வாரிசு திரைப்படத்திற்கு தெலுங்கில் தடை எச்சரிக்கும் சீமான்
கர்ப்ப காலங்களில் இவர்கள் பெறும் பயிற்சிகள் மூலம் சுகப்பிரசவம் ஆவதை உறுதி செய்கிறார். மேலும், மனமும் உள்ளமும் மகிழ்வுடன் நம்பிக்கையுடன் இருக்க இந்த படத்தின் வாயிலாக கர்ப்ப பெண்களை குறிப்பிடுகிறார். அதில் வெற்றியும் அடைகிறார். கணவன் மனைவிக்குள் அன்யூனிம் இந்த காலக்கட்ட்த்தில் அதிகமாக இருந்தால் அவளுக்கு மிகவும் பாதுகாப்பாக உணர்வாள் அதனால் அவளை மதிக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார் இயக்குனர்.
இப்படம் பெண்கள் மத்தியிலும் கணவன் மனைவி மத்தியிலும் பெரும் வரவேற்பை பெறும் என்பதில் எந்த ஐயமுமில்லை.
இது போன்ற பலவிதமான தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.