“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற புறநானூற்றுப் பாடலானது இன்றும் சாதி, மதம், இனம் என அனைத்தையும் கடந்து தரும் கருத்து மிகவும் ஆழமானது. எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியது என்றால் மிகையாகாது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய புலவர் ஓருவரால் எழுதப்பட்டது இப்பாடல். சங்க இலக்கிய நூல்களில் ஓன்றாக திகழும் புறநானூறு என்ற நூலில் இந்த பாடல் காணப்படுகிறது. இப்பாடலை பாடியவர் கணியன் பூங்குன்றனார். கணியன் என்றால் ஜோதிடன் என்று பொருள். ஜோதிடத்தை கணித்து சொல்பவன் எழுதுபவன் என்றும் கூறலாம்.
சங்க காலத்தில் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய புலவர்கள் பலர் ஜோதிட ஞானமும் பெற்றிருந்தனர். இப்புலவர்களை அரசர்கள் தன் அரச அவையிலே தனி இருக்கை அமைத்து அவருக்கு பெருமை சேர்த்துள்ளனர். மேலும், இவர்கள் கோள்களின் நன்மை தீமைகளை அறிந்து அவற்றை கூறியுள்ளனர்.
அவ்வாறு விளங்கிய கணியன் பூங்குன்றனார் எழுதிய ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற புறநானூற்றின் 192 வது பாடலையும் அவை தரும் விளக்கத்தையும் இப்பதிவில் காண்போம்.
இதையும் கவனிக்க: தமிழ் இலக்கணத்தில் திணை
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே,
வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே
முனிவின் இன்னா தென்றலும் இலமே
மின்னொடு வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது
திறவோர் காட்சியில் தெளிந்தனம்
ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே – (புறம் 192) கணியன் பூங்குன்றனார்.
பாடலின் விளக்கம்:
அனைத்து ஊரும் நம் ஊரே அனைத்து மக்களும் நமது உறவினர்களே. உலக மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும். நன்மை தீமை அடுத்தவரால் வருவது அல்ல. நாம் செய்யும் செயலே நம் இன்பத்துக்கும் துன்பத்துக்கும் காரணம். ஆதலால் தீமையான குணத்தையும் தீமை செய்வதையும் விட்டு விட்டு நன்மை செய்வதை தொடர்ந்தால் நமக்கு நன்மையே விளையும்.
துன்பமும் ஆறுதலும் மற்றவர்கள் தருவதில்லை. உனக்கான துன்பத்துக்கு காரணமான நீயே அதற்கான ஆறுதல். துன்பத்தை நீ விளைவித்து விட்டு தவறை நீ செய்து விட்டு அதற்கான ஆறுதலை மட்டும் வேறு ஓருவரிடம் தேடக்கூடாது.
நிரந்தரம் இல்லாத வாழ்க்கை பயணத்தில் நிரந்தர ஓய்வு எனப்படும் இறப்பு ஒருநாள் அனைவருக்கும் வரும். பிறந்த காலம் தொடக்கம் நம்முடன் சேர்ந்தே நடப்பது நம்முடைய மரணம். எனவே இறப்பு என்பது அதிசயம் இல்லை எனவே அதை நினைத்து நினைத்து துன்பப்பட வேண்டாம்.
இறைவன் அருளால் எனக்கு அனைத்தும் கிடைத்து விட்டது நான் மகிழ்ச்சியானவன் இனி என் வாழ்க்கை இனிய வாழ்க்கை என்று ஒரு போதும் எண்ணாதீர்கள். பிறப்பு இறப்பு போல. பகல் இரவு போல இன்ப துன்பமும் உண்டு. எனவே எதிலும் அதீத மகிழ்ச்சி கொள்ளாதீர்கள்.
ஒருவனுக்கு துன்பம் மட்டுமே என்றும் துணையாக இருந்தது இல்லை. துன்பம் மட்டுமே என் வாழ்க்கையாக இருக்கின்றது என்று வாழ்க்கையை வெறுத்து ஒதுக்காதீர்கள். இதுவும் கடந்து போகும் என்று எண்ணுங்கள்.
நீராவியாதல் என்ற அறிவியலுக்கு இணங்க கடல் நீர் ஆவியாகி மேகமாகி பின் மழையாகிறது. இவ்வாறு எப்படி மேகமானது கடல் நீரை வந்து எடுத்துச் செல்கிறதோ. அதுபோல நம் வாழ்வில் எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதே இயற்கை அதற்கு நாம் தாயாராக இருக்கின்றோமோ என்பதே கேள்வி. எனவே வருவதை எதிர்கொள்ள எப்போதும் தாயராக இருங்கள்.
நம்மை விட பெரிய இடத்தில் இருப்போரை நாம் தலைமேல் தூக்கிவைக்கவும் தேவையில்லை. நம்மை விட சிரியவர்களை ஏளனமாக நினைக்கவும் தேவையில்லை. இந்த குணம் தான் வாழ்வில் கற்றவர்களுக்கு உரிய சிறந்த குணமாகும்.
இது போன்ற தகவல்களையும் ஆன்மீகம், ஜோதிடம், கல்வி, நகைச்சுவை, பழமொழிகள், செய்திகள் என அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள தலதமிழ் இணைய தளத்தை அனுகவும்.